For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அட.. 2019ல் நம்ம மக்கள் இதையா விழுந்து விழுந்து தேடினாங்க.. கூகுள் வெளியிட்ட ஆச்சர்ய லிஸ்ட்!

2019ல் இந்தியாவில் மக்கள் கூகுளில் அதிகம் தேடிய 5 வார்த்தைகளின் பட்டியல் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: 2019ல் இந்தியாவில் மக்கள் கூகுளில் அதிகம் தேடிய 5 வார்த்தைகளின் பட்டியல் வெளியாகி உள்ளது.

எல்லா வருடமும் டிசம்பர் மாத இறுதியில் கூகுள் அந்த வருடம் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள், செய்திகள் குறித்த பட்டியலை வெளியிடும். சினிமா, அரசியல், விளையாட்டு, சர்ச்சை என்று பல விஷயங்களில் அதிகம் தேடப்பட்ட விஷயங்களை மொத்தமாக கூகுள் வெளியிடும்.

இதில் பெரும்பாலும் இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் குறித்த தேடல்தான் அதிகம் இடம்பெறும். ஸ்கோர் பார்க்க வேண்டும் என்று கூகுளில் எல்லோரும் தேடுவதால் பெரும்பாலும் கிரிக்கெட் சார்ந்த தேடுதல்தான் அதிகம் இடம்பெறும்.

கூகுள் அதிகம்

கூகுள் அதிகம்

அதேபோல் 2019ம் வருடமும் கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக இந்த வருடம் உலகக்கோப்பை கிரிக்கெட் இடம்பெற்றுள்ளது. இந்த வருடம் ஏப்ரல் மே மாதங்களில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து இங்கிலாந்து மோதி, அந்த போட்டி இரண்டு முறை டிராவாகி, கடைசியில் பவுண்டரி கணக்கில் இங்கிலாந்து வென்று கோப்பையை வென்றது.

தொடர் எப்படி

தொடர் எப்படி

ஆனாலும் இந்த தொடர் முழுக்க இந்தியாதான் ஆதிக்கம் செலுத்தியது. செமி பைனல் போட்டியில் மிக மோசமாக ஆடி நியூசிலாந்து அணியிடம் இந்தியா போராடி தோல்வி அடைந்தது. இந்த தொடர் முழுக்க போட்டிகள் சிறப்பாக இருந்த காரணத்தால் கூகுளிலும் உலகக்கோப்பை கிரிக்கெட் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக மாறியுள்ளது.

தேர்தல் என்ன

தேர்தல் என்ன

ஒரு பக்கம் கிரிக்கெட் போட்டி தீவிரமாக நடந்தது என்றால் இன்னொரு பக்கம் லோக்சபா தேர்தல் மிகவும் தீவிரமாக நடந்தது. 1 மாதம் நடந்த பிரச்சாரம், பின் 1 மாதம் நீண்ட தேர்தல் என்று இரண்டு மாதம் இந்த தேர்தல் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. எல்லோரும் கணித்தது போல பாஜக கூட்டணி 300+ இடங்களை வென்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. இதனால் லோக்சபா தேர்தல் என்ற வார்த்தை 2019 கூகுள் சர்சில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

சந்திராயன்-2 எப்படி?

சந்திராயன்-2 எப்படி?

நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 கடந்த ஆகஸ்ட் மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது. அதன்பின் செப்டம்பர் 7ம் தேதி அதிகாலை சந்திரயான் 2ல் இருக்கும் விக்ரம் லேண்டர் நிலவின் தென் பகுதியில் இறங்கி இருக்க வேண்டும். இந்த விக்ரம் லேண்டர் சில நாட்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பான செய்திகளை மக்கள் அதிகமாக கூகுளில் இந்த வருடம் முழுக்க தேடி உள்ளனர். கூகுள் தேடலில் சந்திராயன்-2 மூன்றாம் இடம் பிடித்துள்ளது.

கபீர் சிங் எப்படி

கபீர் சிங் எப்படி

இந்த பட்டியலில் இடம்பிடித்த ஷாக்கிங் விஷயம்தான் கபீர் சிங். தெலுங்கில் வெளியாகி ஹிட் அடித்த அர்ஜுன் ரெட்டி பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்த படத்தை ஷாகித் கபூர், கியாரா அத்வானி ஆகியோர் இந்தியில் நடிக்க, அதே தெலுங்கு இயக்குனர் சந்தீப் ரெட்டி இயக்கி இருந்தார். மக்கள் இதற்கு எதிராக நிறைய கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். இதனால் இந்த படம் சர்ச்சைக்கு உள்ளாகி கூகுளில் வைரலாகி உள்ளது.

அவெஞ்சர் எண்டு கேம் எப்படி

அவெஞ்சர் எண்டு கேம் எப்படி

கூகுள் தேடலில் இந்தியாவில் ஹாலிவுட் படம் ஒன்றை குறித்தும் தீவிரமாக தேடி இருக்கிறார்கள். கடந்த வருடம் அவெஞ்சர் இன்பினிட்டி வார் படம் வெளியானது. இந்த படத்தில் மொத்தமாக உலகில் இருக்கும் 50% மக்கள் தொகையை தானோஸ் ஒரு சொடக்கில் அழிக்க இரண்டாவது பாதியில் என்ன நடக்கிறது என்பதை அவெஞ்சர் எண்டு கேம் என்று மார்வெல் நிறுவனம் படமாக வெளியிட்டது.

அவெஞ்சர் ஏன்?

அவெஞ்சர் ஏன்?

அவெஞ்சர் சீரிஸ் படங்களில் வெளியான கடைசி படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம்தான் தற்போது உலகில் அதிக வசூல் செய்த படம் ஆகும். பல வருட டைட்டானிக் ரெக்கார்டை இந்த படம் முறியடித்தது. தற்போது கூகுளில் இந்தியாவில் தேடப்பட்ட ஐந்தாவது பெரிய வார்த்தையாக அவெஞ்சர் எண்டு கேம் உருவெடுத்துள்ளது.

English summary
Year Ender 2019: There are the top 5 words searched mostly in Google by Indians this year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X