• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Breaking News Live: காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இருவர் திடீர் மாயம்!

|

பெங்களூரு: காங்கிரசின் பிரதாப் கவுடா, ஆனந்த்சிங் ஆகிய 2 எம்எல்ஏக்கள் மாயமாகியுள்ளதால் கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த எம்எல்ஏக்களை காங்கிரஸ் தலைவர்களால் போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனிடையே நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு தரப்போகிறார்கள் என ஸ்ரீராமலு அறிவித்து பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளார். பாஜக தொண்டர்கள் மத்தியில் பகிரங்கமாக ஸ்ரீராமலு அறிவிப்பு வெளியிட்டார். பாஜக எம்எல்ஏவாகியுள்ள ஸ்ரீராமலு ரெட்டி சகோதரர்களுக்கு உற்ற நண்பன் என்பது கவனிக்கத்தக்கது.

Yeddyurappa leaves for Raj bhavan to take oath as CM - flash live

தொண்டர்கள் வாழ்த்து கோஷம் முழங்க முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா. ஆளுநர் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். கடவுள் மற்றும் விவசாயிகள் பெயரால் எடியூரப்பா பதவி பிரமாணம் செய்து கொண்டார். அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை.

லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த எடியூரப்பா கர்நாடகாவின் 23வது முதல்வர் ஆவார். ஆளுநர் மாளிகையில் உள்ள கண்ணாடி மாளிகையில் அவர் பதவியேற்றார்.

அவருடன் கோவிந்த காரஜோலா, ஸ்ரீராமலு, ஈஸ்வரப்பா, ஆர்.அசோக்கும் பதவியேற்கலாம் என கூறப்படுகிறது. முதல்வராக பதவியேற்க பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் இருந்து ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்ட அவர், வழியில் பெங்களூர் ராதாகிருஷ்ணன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

Newest First Oldest First
8:00 PM, 17 May
கர்நாடகா சட்டசபை காங். தலைவராக பரமேஸ்வரா தேர்வு
7:59 PM, 17 May
பெங்களூரு ஹோட்டலில் நடந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தேர்வு
7:15 PM, 17 May
பெங்களூரில் இருந்து இன்று இரவே காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் கொச்சிக்கு பயணம்
7:14 PM, 17 May
எம்எல்ஏக்கள் நடவடிக்கைகளை உளவுத்துறை மூலம் கவனிப்பதாக எடியூரப்பா கூறியிருந்தார்
7:14 PM, 17 May
பாஜக வலையில் இருந்து தப்பிக்க கொச்சி பயணிக்கிறது எம்எல்ஏக்கள் குழு
6:59 PM, 17 May
தமிழகத்தில் பல இடங்களில் காங்.போராட்டம்
6:58 PM, 17 May
சென்னை திருவொற்றியூர், தாம்பரத்தில் போராட்டம்
6:58 PM, 17 May
மதுரையில் திருநாவுக்கரசர் தலைமையில் ஆர்ப்பாட்டம்
6:58 PM, 17 May
கர்நாடகா ஆளுநர் முடிவைக் கண்டித்து போராட்டம்
6:06 PM, 17 May
மேகலாயாவிலும் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது காங்.
6:06 PM, 17 May
ஆளுநரை நாளை சந்திக்கிறார் மணிப்பூர் மாஜி முதல்வர் இபோபி சின்
5:59 PM, 17 May
மணிப்பூரிலும் காங்கிரஸ் போர்க்கொடி
5:58 PM, 17 May
ஆட்சி அமைக்க உரிமை கோர காங். எம்.எல்.ஏக்கள் முடிவு
5:49 PM, 17 May
கர்நாடகா ஆளுநரைக் கண்டித்து நாடு முழுவதும் காங். போராட்டம்
5:49 PM, 17 May
நாடு முழுவதும் நாளை மாநில, மாவட்ட தலைநகரங்களில் காங். போராட்டம்
5:49 PM, 17 May
மாநில கமிட்டிகளுக்கு காங். மேலிடம் உத்தரவு
5:32 PM, 17 May
கர்நாடகத்தில் ஜூன் 11-இல் ஜெயநகர் தொகுதிக்கு வாக்குப் பதிவு
5:26 PM, 17 May
ஜூன் 16-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது
5:25 PM, 17 May
ஜெயநகர் தொகுதியின் வேட்பாளர் விஜயகுமார் இறந்ததால் மே 12-இல் தேர்தல் நடத்தவில்லை
5:12 PM, 17 May
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கியுள்ள ரிசார்ட்டில் போலீஸ் வாபஸ்
5:12 PM, 17 May
எடியூரப்பா உத்தரவையடுத்து பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்ட போலீசார் திடீர் வாபஸ்
5:06 PM, 17 May
சட்டசபையில் கலவரத்தில் ஈடுபட காங், மஜத திட்டம்- எடியூரப்பா பகீர் குற்றச்சாட்டு
5:06 PM, 17 May
அடுத்த வருடம் கர்நாடகாவில் 28 லோக்சபா தொகுதிகளையும் பாஜக வெல்லும்-எடியூரப்பா
5:06 PM, 17 May
கர்நாடகாவில் இரவு, பகல் பாராமல் தேர்தல் பிரசாரம் செய்த மோடிக்கு 28 எம்பிக்கள் பரிசு
5:01 PM, 17 May
பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் காத்திருக்க மாட்டேன்-எடியூரப்பா
5:01 PM, 17 May
காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் குண்டர்கள் பிடியில் உள்ளதை போல வைக்கப்பட்டுள்ளனர்
5:01 PM, 17 May
உளவுத்துறை மூலம் எனக்கு தகவல்கள் வந்து கொண்டுள்ளன-எடியூரப்பா
5:01 PM, 17 May
காங்கிரஸ் இல்லாத கர்நாடகாவாக மாறியுள்ளது-எடியூரப்பா
5:01 PM, 17 May
பெரும்பான்மையை நிரூபிக்க என்ன செய்ய போகிறோம் என்பதை இப்போது சொல்ல மாட்டேன்
5:00 PM, 17 May
பாஜக அரசு 100 சதவீதம் பெரும்பான்மையை நிரூபித்தே தீரும்- எடியூரப்பா பேச்சு
READ MORE

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Here are the Tamilnadu today Flash news.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more