For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விவசாய கடன்கள் 3 நாட்களில் தள்ளுபடி செய்யப்படும் : முதல்வர் எடியூரப்பா

கர்நாடக முதல்வராக பதவி ஏற்கும் எடியூரப்பா, இன்று முதல் கையெழுத்தாக விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    முதல் கையெழுத்தில் எடியூரப்பா விவசாய கடன்கள் தள்ளுபடி

    பெங்களூர்: கர்நாடக முதல்வராக பதவி ஏற்றுள்ள எடியூரப்பா, இன்று முதல் கையெழுத்தாக விவசாய கடன்களை தள்ளுபடி செய்து இருக்கிறார். நிதி நிலவரங்களை ஆராய்ந்து மூன்று நாட்களில் இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

    கர்நாடகாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத காரணத்தால் பெரிய குழம்பமான சூழ்நிலை நிலவி வருகிறது. பாஜக 104 தொகுதிகளில் வென்று இருந்தாலும் அந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 78 இடங்களில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மஜத உடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்த போதும், ஆளுநர் அவர்களை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை.

    Yeddyurappa will sign sign the total Agriculture Loan waiver as Ks CM

    பல்வேறு பரபரப்புகளுக்கும், களேபரங்களுக்கும் மத்தியில் கர்நாடக முதல்வராக்க எடியூரப்பா பதவி ஏற்றுள்ளார். பாஜக கட்சி 104 இடங்களில் வெற்றி பெற்று இருந்தாலும், ஆளுநர் பாஜக கட்சியையே ஆட்சி அமைக்க அழைத்தார். மாறாக 78 இடங்களில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மஜத உடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்த போதும், ஆளுநர் அவர்களை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை.

    எடியூரப்பா ஆளுநரிடம், பெரும்பான்மையை நிரூபிக்க 7 நாள் அவகாசம் கேட்டு இருந்தார், ஆளுநர் அவருக்கு 15 நாள் அவகாசம் கொடுத்துள்ளார். இந்த நிலையில் தற்போது எடியூரப்பாவும், அவருடன் இன்னும் 4 அமைச்சர்களும் பதவி ஏற்கிறார்கள்.

    முதல்வராக பதவி ஏற்கும் எடியூரப்பா, இன்று முதல் கையெழுத்தாக முக்கியமான விஷயம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார். அவர் மொத்தமாக விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் உத்தரவில் முதல்வராக முதல் கையெழுத்து இட்டு உள்ளார்.

    அதன்படி ரூ.1 லட்சம் வரையிலான விவசாய கடன் எல்லாம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.56 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இன்றே தள்ளுபடி செய்யப்படாது என்றுள்ளார்.

    அதன்படி ''தேர்தலில் வாக்குறுதி அளித்தது போலவே கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தலைமைச் செயலரிடம் நிதி நிலவரம் பற்றி கேட்டுள்ளேன். இன்னும் மூன்று நாட்களில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும்'' என்றுள்ளார்.

    English summary
    Yeddyurappa is going to sworn as CM today, and immediately he is going to sign the total Agriculture Loan waiver for entire karnataka.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X