For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எடியூரப்பா சிறந்த பணியை செய்துள்ளார்.. பாராட்டிய ஜேபி நட்டா.. கர்நாடக அரசியல் திடீர் திருப்பம்

Google Oneindia Tamil News

கோவா : கர்நாடகாவில் முதல்வர் மாற்றப்படலாம் என்ற பேச்சுக்களுக்கு மத்தியில், பாஜக தலைவர் ஜே பி நட்டா கூறிய பதில் கர்நாடகா அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவில் முதல்வர் மாற்றப்படக்கூடும் என்ற கருத்தை நிராகரித்தார். முதல்வர் பி எஸ் எடியுரப்பா நன்றாக வேலை செய்துள்ளார் என்று கூறினார்.

இரண்டு நாள் பயணமாக கோவாவிற்கு சென்றிருந்தார் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா. அங்குள்ள பனாஜி நகரில் கட்சி நிகழ்ச்சியை முடித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய நட்டாவிடம் கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா பதவியில் இருந்து விலகிக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுவாரா என்று கேட்கப்பட்டது.

நெருக்கடியே இல்லை

நெருக்கடியே இல்லை

அதற்கு ஜேபி நட்டா, "எடியூரப்பா சிறந்த பணியை செய்துள்ளார். கர்நாடகா சிறப்பாக செயல்படுகிறது. தனது பாணியில் மாநிலத்தை எடியூரப்பா வழிநடத்துகிறார்," என்றார் மேலும் கர்நாடாக மாநிலத்தில் தலைமை பதவிக்கு நெருக்கடி என்று நினைப்பது நீங்கள் தான். நாங்கள் அல்ல," என்றும் செய்தியாளர்களுக்கு பதில் அளித்தார்.

எடியூரப்பா பேட்டி

எடியூரப்பா பேட்டி

முன்னதாக முதல்வர் பதவியில் தொடர்வதா வேண்டாமா என்பதை பாஜக மேலிடத்தின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப முடிவு செய்வேன் என்று கடந்த ஜூலை 25ம் தேதி எடியூரப்பா கூறியிருந்தார். எனவே அப்படிப்பட்ட சூழலில் ஜேபி நட்டாவின் இன்றை கருத்து கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றன.

விதிவிலக்கு

விதிவிலக்கு

இதன் மூலம் எடியூரப்பா கர்நாடகா முதல்வர் பதவியில் தொடருவார் என்று தெரிய வருகிறது. எனினும் கர்நாடகா அரசியலில் என்ன நடக்கும் என்பதை குறித்து உறுதியாக தகவல்கள் இல்லை. பாஜகவை பொறுத்தவரை 75வயதிற்கு மேல் பதவிகளை தொடரவது இல்லை. அந்த விதியை கடைபிடித்து வருகிறது. விதி விலக்காகவே 78-79 வயது வரை பணியில் தொடர அனுமதிக்கப்பட்டுள்ளார் எடியூரப்பா.

லிங்காயத் மடாதிபர்கள் எச்சரிக்கை

லிங்காயத் மடாதிபர்கள் எச்சரிக்கை

அதற்காக எடியூரப்பா பிரதமர் நரேந்திர மோதி, கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் நன்றி தெரிவித்தார். இதேபோல் டெல்லி தலைமை அறிவுறுத்தினால் முதல்வர் பதவியை விட்டு விலகுவதாக எடியூரப்பா சொன்னதுபோல், இதுவரையிலும் யாரும் சொன்னதும் இல்லை. என்ன நடக்கும் என்பதே புரியாத புதிராக உள்ளது. எடியூரப்பாவை மாற்றுவது சிக்கலை ஏற்படுத்தும் என எச்சரிக்கிறார்கள் லிங்காயத் சமுதாய மடாதிபதிகள். லிங்காயத் சமூகம் தான் கர்நாடகாவில் அதிக அளவில் வாக்கு வங்கி உள்ள சமூகம் ஆகும்.

English summary
According to PTI, speaking to media persons in Panaji at the end of his two-day Goa visit, Nadda said, “Yediyurappa has done good work. Karnataka is doing well. Yediyurappa is taking care of the things in his own way." Ruling out any leadership crisis in Karnataka, Nadda said, “That is what you feel. We don’t feel so."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X