For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எடியூரப்பா தலைவிதியை அவரின் கடிதம்தான் தீர்மானிக்கும்.. மாஜி மத்திய அமைச்சர் கருத்து!

எடியூரப்பாவின் தலைவிதியை அவரின் கடிதம்தான் தீர்மானிக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    முதல்வராக பதவியேற்ற எடியூரப்பாவுக்கு எதிர்த்து சட்டசபை வளாகத்தில் சித்தராமையா தர்ணா

    பெங்களூரு: எடியூரப்பாவின் தலைவிதியை அவரின் கடிதம்தான் தீர்மானிக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    எடியூரப்பாவை கர்நாடக முதல்வராக பதவியேற்க ஆளுநர் நேற்றிரவு அழைப்பு விடுத்தார். இதனை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் மஜத உச்சநீதிமன்றத்தில் இரவோடு இரவாக வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்காக ஏற்கப்பட்டு நள்ளிரவு 1.45 மணிக்கு நீதிபதிகள் ஏ.கே.சிக்கிரி, அசோக் பூஷன் மற்றும் எஸ்.ஏ.போப்தே ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

    நள்ளிரவில் விசாரணை

    நள்ளிரவில் விசாரணை

    இந்த மனு மீதான விசாரணை சுமார் இரண்டரை மணிநேரம் நடைபெற்றது. இந்த வழக்கில் மத்திய அரசு சார்பாக துஷர் மேத்தா, முகுல் ரோத்தகி, கே.கே.வேணுகோபால் ஆகிய 3 வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்டனர்.

    அறை எண் 6

    அறை எண் 6

    மனுதாரர்கள் சார்பில் அபிஷேக் சிங்வி வாதிட்டார். உச்சநீதிமன்ற அறை எண் 6ல் விசாரணை நடைபெற்றது. இரண்டரை மணிநேரமாக நடைபெற்ற காரசார வாதங்களுக்கு பிறகு எடியூரப்பா பதவியேற்பதற்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    எம்எல்ஏக்களின் கடிதங்கள்

    எம்எல்ஏக்களின் கடிதங்கள்

    மேலும் ஆதரவு எம்எல்ஏக்களின் கடிதங்களை நாளை காலை 10.30 மணிக்குள் தாக்கல் செய்யவும் எடியூரப்பாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    பதவியேற்க மாட்டேன்

    இந்நிலையில் இதுதொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரான ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், எடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை நள்ளிரவில் விசாரித்த சுப்ரீம் கோர்ட்டுக்கு சல்யூட். எடியூரப்பாவாக நானிருந்தால் வழக்கு விசாரணைக்கு வரும் நாளை காலை 10.30 வரை பதவியேற்க மாட்டேன்.

    கடிதம்தான் தலைவிதியை தீர்மானிக்கும்

    எடியூரப்பாவின் தலைவிதியை ஆளுநரிடம் அவர் அளித்த கடிதம்தான் தீர்மானிக்கும். அந்தக் கடிதத்தில் 104 க்கும் அதிகமான எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை. ஆளுநரின் அழைப்பிதழிலும் எந்த எண்ணையும் குறிப்பிடவில்லை! இவ்வறு ப.சிதம்பரம் டிவிட்டியுள்ளார்.

    English summary
    Former union Minister P Chidambaram salutes Supreme court for investigating Yeddyurappa case at midnight.Yedyurappa's letter to the Governor will seal his fate he said further on tweet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X