For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒடிசாவில் அதிசய மஞ்சள் நிற ஆமை...இதற்குக் காரணம் இதுதானாம்

Google Oneindia Tamil News

பாலசோர்: ஒடிசாவில் இருக்கும் பாலசோர் மாவட்டத்தில் சுஜான்பூர் கிராமத்தில் அறிய வகை மஞ்சள் நிறத்திலான ஆமை பிடிபட்டுள்ளது. இது மிகவும் அறிய வகை என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், பிறழ்வு என்று வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாலசோர் மாவட்டத்தில் சுஜான்பூர் கிராமத்தில் பிடிக்கப்பட்ட இந்த ஆமை குறித்து வனத்துறை வார்டன் பானூமித்ரா கூறுகையில், ''ஆமையின் முழு உடலும் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது. இது ஆமைதான். இதுபோன்ற ஆமையை முன்பு நான் பார்த்தது இல்லை'' என்று தெரிவித்துள்ளார்.

Yellow turtle caught from Balasore in Odisha

சுஜான்பூர் கிராம மக்கள் இந்த ஆமையை ஞாயிற்றுக் கிழமை பிடித்துள்ளனர். உடனே வனத்துறை அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் வரவும் ஆமையை ஒப்படைத்து விட்டனர்.

சட்டமன்ற தேர்தல்... 60 தொகுதிகளுக்கு குறி வைக்கும் பாஜக... அதிமுக கொடுக்கப்போவது எவ்வளவு..?சட்டமன்ற தேர்தல்... 60 தொகுதிகளுக்கு குறி வைக்கும் பாஜக... அதிமுக கொடுக்கப்போவது எவ்வளவு..?

இதுகுறித்து ட்விட்டரில் இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா வீடியோவுடன் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், '' ஆமையின் பிறழ்வாக இது இருக்கலாம். (அதாவது மனித உடலில் எப்படி நிறம் மாறுகிறதோ அதுபோல் இருக்கலாம்) இதேபோன்று சிந்துவிலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆமை பிடிக்கப்பட்டு இருந்தது'' என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில், ''அதனுடைய கண்களைப் பாருங்கள். பிங் நிறத்தில் இருக்கிறது. பிறழ்வு ஏற்பட்டு இருப்பதற்கான அடையாளங்களில் இதுவும் ஒன்று'' என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதம் டிரையோனைசிடா என்ற வகை ஆமை இதே ஒடிசா மாநிலத்தின் டியூலி அணையில் இருந்து பிடிக்கப்பட்டு இருந்தது. மீண்டும் இந்த ஆமை அணையில் விடப்பட்டது. இந்த வகை ஆமையின் மேற்பரப்பு மிகவும் மிருதுவாக இருக்கும். ஆப்ரிக்கா, ஆசியா, வடக்கு அமெரிக்கா ஆகிய இடங்களில் இந்த வகை ஆமை அதிகமாக இருக்கிறது. ஆமை பொதுவாக 30 கிலோ கிராம் எடை வரை இருக்கும். இது 50 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழும்.

English summary
A rare yellow turtle was spotted in Odisha, Most probably it was an albino. One such aberration was recorded by locals in Sindh few years back says Susanta IFS
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X