For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கபீர் தாஸ் மசூதியில் அன்பளிப்பாக கொடுத்த குல்லாவை அணிய மறுத்தார் யோகி ஆதித்யநாத்!

கபீர் தாஸ் மசூதியில் அன்பளிப்பாக கொடுத்த குல்லாவை அணிய உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மறுத்துவிட்டார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    மசூதியில் அன்பளிப்பாக கொடுத்த குல்லாவை அணிய மறுத்தார் உ.பி. முதல்வர்- வீடியோ

    லக்னோ: கபீர் தாஸ் மசூதியில் அன்பளிப்பாக கொடுத்த குல்லாவை அணிய உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மறுப்பு தெரிவித்தார்.

    கவிஞர் கபீர் தாஸின் 500-ஆவது நினைவு தினத்தையொட்டி லக்னோவில் உள்ள அவரது சமாதிக்கு வியாழக்கிழமை வருகை தந்தார். இதற்கு முன்னதாக பிரதமரின் வருகையையொட்டி ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக முதல்வர் யோகி ஆதித்யநாத் அந்த கோயிலுக்கு புதன்கிழமை சென்றார்.

    Yogi Adityanath refuses to wear Cap at Kabir Shrine

    அப்போது அவர் உள்ளே வந்தபோது அங்கிருந்த கோயில் நிர்வாகி காதிம் ஹுசைன் என்பவர் குல்லா ஒன்றை அன்பளிப்பாக யோகியின் தலையில் அணிவிக்க முயற்சித்தார்.

    அப்போது முதல்வர் யோகி மிகவும் நாசுக்காக சிரித்துக் கொண்டே குல்லாவை அணிவிக்க வேண்டாம் என்று தடுத்துவிட்டார். இதுகுறித்து காதிம் ஹுசைன் கூறுகையில் கபீர் தாஸின் மசூதிக்கு வந்த முதல்வர் யோகிக்கு குல்லா அணிவிக்க முயன்றேன். அதை அவர் வேண்டாம் என்று கூறிவிட்டார்.

    எனினும் குல்லாவை மட்டும் பெற்றுக் கொள்ள ஏற்றுக் கொண்டார். கடந்த 2011-ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது அகமதாபாத்தில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டார். அப்போது அங்கு வந்த மதகுரு கொடுத்த குல்லாவை அணிந்து கொள்ள மோடி மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The UP CM Yogi Adityanath refuses to wear cap at Kabir Shrine on wednesday to oversee the preparation of PM Narendra's modi's visit.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X