For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பந்தாடும் மமதா பானர்ஜி.. பக்கத்து மாநிலத்திலிருந்து காரில் மே. வங்கம் சென்று, யோகி ஆதித்யநாத் அவஸ்தை

Google Oneindia Tamil News

Recommended Video

    யோகியின் ஹெலிகாப்ட்டரை அனுமதிக்காமல் அலைக்கழிக்கும் மமதா- வீடியோ

    கொல்கத்தா: உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பந்தாடி வருகிறார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி.

    லோக்சபா தேர்தலையொட்டி மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளில் 20 தொகுதிகளையாவது கைப்பற்றிவிட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறது பாஜக. எனவே 200 தேர்தல் பொதுக்கூட்டங்களை நடத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி சில தினங்களுக்கு முன்பு துர்காபூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

    Yogi Adityanath travel by road to West Bengal after Mamata Banerjee angry

    இந்த நிலையில், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும், பிரச்சார களத்திற்கு கொண்டுவந்துள்ளது பாஜக தலைமை. ஆனால், சிபிஐ மற்றும் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் நடுவேயான மோதல் போக்கால் கோபத்தில் போராட்டத்தில் குதித்த, மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி, ஆதித்யநாத்தை அலைக்கழித்துவிட்டார்.

    வடக்கு தினாஜ்பூரில் நேற்றுமுன்தினம், பாஜக பேரணியில் பங்கேற்க வந்த யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டர் தரையிறங்க திடீரென மேற்கு வங்க அரசு அனுமதி மறுத்தது. இதனால் ஆதித்யநாத், நேரடியாக வர முடியாமல், வீடியோவில் தொண்டர்களிடம் உரையாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

    இந்தநிலையில்தானந் மேற்குவங்க மாநிலம் புருலியா பகுதியில், இன்று நடக்கும் பாஜக கூட்டத்தில் பங்கேற்க வந்த யோகி ஆதித்யநாத்தின் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி வழங்க, மீண்டும் மேற்கு வங்க அரசு மறுத்துவிட்டது.

    இதையடுத்து அண்டை மாநிலமான பாஜக ஆளும் ஜார்கண்ட்டில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய யோகி ஆதித்யநாத், அங்கேயிருந்து கார் மூலமாக பயணித்து, புருலியா சென்று, அங்கே திரண்டிருந்த பாஜக தொண்டர்களிடையே உரையாற்றினார். மமதா பானர்ஜி, சக முதல்வருக்கே ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கும் அளவுக்கு சர்வாதிகார குணம் கொண்டவர் என குற்றம்சாட்டி பேசினார் யோகி ஆதித்யநாத்.

    English summary
    Uttar Pradesh CM Yogi Adityanath left Bokaro (Jharkhand) by road to reach the rally venue in Purulia. He travellec by road to Trinamool Congress-ruled West Bengal after the state administration denied permission to land his chopper.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X