For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நோய்வாய்ப்பட்ட தொழிலாளிகள் பி.எப். பணத்தை எடுத்துக்கொள்ள புது சலுகை அறிவித்த அரசு

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: உடல் நலக்குறைவு நேரங்களில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை டாக்டர் அனுமதி கடிதம் கொடுக்காமல் கூட எடுத்துக்கொள்ளலாம் என்று மத்திய தொழிலாளர் அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிறுவன உரிமையாளரின் ஒப்புதலையும் டாக்டரின் சான்றையும் சமர்ப்பித்தே பி.எப் பணத்தின் ஒரு பகுதியை எடுப்பது கட்டாயமாகும் என்ற நிலை இதன் மூலம் மாறியுள்ளது.

You can now withdraw PF savings without employer's approval to pay medical bills

மருத்துவ நோக்கங்களுக்காக பி.எப் நிதி சேமிப்புகளை திரும்ப பெற சுயமாக ஒரு சான்றிதழை (self-declaration form) தொழிலாளி கொடுத்து ஆறு மாத கால சேமிப்பை பெற்றுக்கொள்ள முடியும் என்கிறது இந்த புதிய அறிவிப்பு.

மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவது உள்ளிட்ட பெரிய அளவிலான நோய் சிகிச்சைகளுக்குத்தான் இந்த விதிமுறை பொருந்தும். டிபி, தொழுநோய், வாதம், இதய சம்மந்தமான நோய்கள் மற்றும் கேன்சர் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் பி.எப்.பணத்தை எடுக்க ஓ.கே. சொல்லியுள்ளது அமைச்சகம்.

மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கும் பி.எப் தொகையை எடுக்கலாம். இதற்கு மருத்துவ சான்றிதழ் தேவையில்லை என்று அமைச்சகம் கூறியுள்ளது.

English summary
The labour ministry has issued a notification which does not make it mandatory to seek the employer's approval or submit a doctor'scertificate to withdraw provident fund savings for medical purposes. Now you can withdraw your provident fund saving in case of serious illness by submitting a self-declaration form to the Employees' Provident Fund Organisation or EPFO.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X