For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்னுடைய ரத்தம் எது என்று தெரியுமா? கொந்தளிக்கும் சிந்தியா.. ஆனாலும் ம.பி நிலவரம் சரியில்லையே!

என்னுடைய குடும்பம் என்ன, என்னுடைய ரத்தம் என்ன என்று தெரியாமல் எல்லோரும் வதந்தி பரப்புகிறார்கள் என்று மத்திய பிரதேச காங்கிரஸ் அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

போபால்: என்னுடைய குடும்பம் என்ன, என்னுடைய ரத்தம் என்ன என்று தெரியாமல் எல்லோரும் வதந்தி பரப்புகிறார்கள் என்று மத்திய பிரதேச காங்கிரஸ் அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மத்திய பிரதேச அமைச்சருமான ஜோதிராதித்யா சிந்தியா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர் என்ற பயோவை நீக்கியுள்ளார். காங்கிரஸ் உறுப்பினர், எம்பி என்பதை நீக்கிவிட்டு மக்கள் பணியாளர், கிரிக்கெட் ஆர்வலர் என்று மாற்றி உள்ளார்.

இதனால் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறாரா. கட்சியில் இருந்து மொத்தமாக வெளியேற திட்டமிடுகிறாரா என்று கேள்விகள் எழுந்தது. இது பெரிய தீயாக பரவியது.

எந்த காங். எம்எல்ஏவை காணவில்லைனு சொல்லுங்க... பேச வைக்கிறேன்... வதந்திகளால் சீறிய சிந்தியா எந்த காங். எம்எல்ஏவை காணவில்லைனு சொல்லுங்க... பேச வைக்கிறேன்... வதந்திகளால் சீறிய சிந்தியா

என்ன சிக்கல்

என்ன சிக்கல்

அதேபோல் இவர் தன்னுடன் 20 எம்எல்ஏக்களை கொண்டு செல்ல இருக்கிறார். இதனால் சரியாக 115 எம்எல்ஏக்களுடன் மெஜாரிட்டியுடன் மத்திய பிரதேசத்தில் ஆட்சி செய்து வரும் காங்கிரசின் கமல்நாத் அரசு கவிழ போகிறது. காங்கிரஸ் கட்சிக்கு புதிய சிக்கல் வர போகிறது என்று செய்திகள் வெளியானது.

என்ன காரணம்

என்ன காரணம்

இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற முக்கிய காரணமாக இருந்தவர் ஜோதிராதித்யா சிந்தியா. இவர் அங்கு முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டார். ஆனால் ராகுல் காந்தி முதல்வர் பதவியை கமல் நாத்திடம் கொடுத்தார்.

அதிர்ச்சி அடைந்தார்

அதிர்ச்சி அடைந்தார்

அப்போதே ஜோதிராதித்யா சிந்தியா அதிர்ச்சிக்கு உள்ளானார். இதன்பின் நடந்த லோக்சபா தேர்தலின் இவரோ, இவரின் ஆதரவாளர்களோ பெரிய அளவில் பணிகளை மேற்கொள்ளவில்லை. இதனால் சட்டசபை தேர்தலில் மத்திய பிரதேசத்தில் வென்ற காங்கிரஸ், லோக்சபா தேர்தலில் மோசமாக தோற்றது.

என்ன காரணம்

என்ன காரணம்

இதற்கு ஜோதிராதித்யா சிந்தியாவின் கோபம்தான் காரணம் என்று கூறினார்கள். இதன்பின் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகினார். இதனால் ஜோதிராதித்யா சிந்தியா தலைவர் ஆகிறாரா என்று கேள்விகள் எழுந்தது. ஆனால் மீண்டும் சோனியா காந்தி இடைக்கால தலைவர் ஆனார்.

மேலும் ஓரம்கட்டப்பட்டார்

மேலும் ஓரம்கட்டப்பட்டார்

சோனியா வந்த பின் ஜோதிராதித்யா சிந்தியா கட்சியில் மேலும் ஒதுக்கப்பட்டார். கமல் நாத் ஆதரவாளர்களுக்கு கட்சியில் அதிக அளவில் ஆதரவு வழங்கப்பட்டது. அவர்களின் கை ஓங்கியது. இதனால்தான் தற்போது ஜோதிராதித்யா சிந்தியா அதிர்ச்சியில் இருக்கிறார். கட்சியில் இருந்து விலகும் முடிவில் இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

வருத்தமான பதில்

வருத்தமான பதில்

இதற்குதான் தற்போது ஜோதிராதித்யா சிந்தியா வருத்தமான பதில் அளித்துள்ளார். அதில், ஒரு மாதத்திற்கு முன்பே நான் என்னுடைய கணக்கில் மாற்றங்களை செய்துவிட்டேன். என்னுடைய கணக்கு சாதாரணமாக இருக்க வேண்டும் என்று இப்படி செய்தேன். அதை வதந்தியாக்குகிறார்கள்.

குடும்பம்

குடும்பம்

நான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவன். என் குடும்பமே காங்கிரஸ் குடும்பம். என்னுடைய ரத்தம் எது என்று தெரியாமல் எல்லோரும் வதந்தி பரப்புகிறார்கள். இதை பார்க்க வருத்தமாக இருக்கிறது. என்னுடைய அப்பா மாதவ்ராவ் சிந்தியாவின் வரலாறு அவர்களுக்கு தெரியவில்லை என்று சிந்தியா கூறியுள்ளார்.

யார் இவர்கள்

யார் இவர்கள்

ராஜ வம்சத்தை சேர்ந்த சிந்தியாவின் அப்பா மாதவராவ் சிந்தியா காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக விளங்கியவர். இவர் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு அமைச்சர் பொறுப்புகளை வகித்து இருக்கிறார். அதேபோல்தான் ஜோதிராதித்யா சிந்தியாவும் காங்கிரஸ் கட்சியில் மட்டுமே இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இவர் டிவிட்டர் மூலமாக காங்கிரஸ் தலைமைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார். ஆனால் இவர் கட்சியை விட்டு போகும் முடிவையோ, கிளர்ச்சி செய்யும் முடிவையோ எடுக்க மாட்டார் என்று கூறுகிறார்கள்.

English summary
You know my blood? Jyotiraditya Scindia on MP political crisis raises too many questions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X