For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"பாத்ரூம் இல்லாமல் எப்படி குளிக்கிறது.. அந்த ஊரில் எதுவுமே இல்லை" ரீனா போட்ட வீடியோவால் பரபரப்பு!

கழிப்பறை இல்லாததால் திருமணத்தை நிறுத்தியுள்ளார் ஒரு பெண்

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: "பாத்ரூம் இல்லாமல் எப்படி குளிக்கிறது? அப்படி அடிப்படை வசதியே இல்லாத ஒரு கிராமத்தில் என்னை கல்யாணம் செய்து தர போகிறார்கள் என் பெற்றோர்.. தயவு செய்து இந்த கல்யாணத்தை நிறுத்துங்கள்" என்று இளம்பெண் ரீனா தேங்காய் உடைத்ததுபோல உண்மையை சொல்லி பதிவிட்ட வீடியோ பெரும் வைரலாகி வருகிறது.

நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை நிறுத்தக்கோரி இளம்பெண் வீடியோ வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 young girl protests against marriage over no toilet, video goes viral

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்தவர் ரீனா சிங்.. 22 வயதாகிறது.. இவர் ஒரு அறிவியல் பட்டதாரி பெண்.. இவரது அப்பா சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் ரீனாவுக்கு வீட்டில் திடுதிப்பென்று மாப்பிள்ளை தேட ஆரம்பித்தனர்.. சுர்லா என்ற கிராமத்தை சேர்ந்த இளைஞரை பேசி முடித்தும் விட்டனர்.. இதில் ரீனாவின் விருப்பத்தை கேட்கவே இல்லை.. பெற்றோரே முடிவு செய்து நிச்சயதார்த்தம் செய்தனர்.

நிச்சயதார்த்தம் ஆனாலும் சரி, ரீனா விடவில்லை.. அதிரடியாக ஒரு வீடியோவை பதிவிட்டார்.. அதில் அவர் சொல்லும்போது, "இந்த கல்யாணத்துல எனக்கு விருப்பம் இல்லை.. என்னை ஒரு வார்த்தைகூட கேட்காமல் ஜூலை 1ம் தேதிக்கு என் அம்மா, அப்பா கல்யாணத்தை முடிவு செய்திருக்கிறார்கள்.

சரஸ்வதிக்கு ஏகப்பட்ட ஆண் நண்பர்கள்.. நேரில் பார்த்துவிட்ட மகள்.. அடித்தே கொன்ற தாய்க்கு 7வருட ஜெயில்சரஸ்வதிக்கு ஏகப்பட்ட ஆண் நண்பர்கள்.. நேரில் பார்த்துவிட்ட மகள்.. அடித்தே கொன்ற தாய்க்கு 7வருட ஜெயில்

எனக்கு பார்த்திக்கிற அந்த மாப்பிள்ளையின் கிராமத்தில் பாத்ரூம்களே இல்லை.. கழிவறையும் இல்லை, குளியலறையும் இல்லை.. பெண்களின் பாதுகாப்புக்கு தேவையான ஒரு அம்சமும் அந்த கிராமத்தில் இல்லை.. பெண்களுக்கு போதிய கல்வியும் வழங்கப்படவில்லை. அதனால எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கும் வரை கல்யாணம் செய்யும் ஐடியாவே இல்லை.. என் கல்யாணத்தை தடுத்து நிறுத்த யாராவது உதவி செய்யுங்க" என்று படாரென்று சொல்லிவிட்டார்.

Recommended Video

    அழுத Delivery Boy.. ஆறுதல் சொன்ன கொள்ளையர்கள்

    இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் பெரும் வைரலானது.. போலீசாரின் கவனத்துக்கும் வீடியோ சென்றது.. நடந்த சம்பவம் குறித்து விசாரித்தனர்.. ஜூலை 1ம் தேதி கட்டாயப்படுத்தி நடக்க இருக்கும் திருமணத்தை ரத்து செய்தனர்.. பெண்ணின் விருப்பம் இல்லாமல் கல்யாணம் செய்ய மாட்டோம் என்று ரீனாவின் பெற்றோரிடமும் போலீசார் எழுதி வாங்கினர். ரீனாவுக்கு இப்போதுதான் நிம்மதியாக உள்ளது. அதே சமயம், ரீனா குறிப்பிட்ட அந்த கிராமத்தில் கழிப்பறை, குளியலறை வசதிகளை செய்து தர அரசு நடவடிக்கை எடுத்தால் நல்லா இருக்கும்!

    English summary
    young girl protests against marriage over no toilet, video goes viral
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X