For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டீ கடைகாரர்.... மீண்டும் மீண்டும் மோடியை சீண்டி ட்விட்டரில் வாங்கி கட்டிய காங்.

பிரதமர் மோடியை டீ விற்பனையாளர் என மீண்டும் சீடி வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறது காங்கிரஸ்.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை மீண்டும் மீண்டும் டீ கடைகாரர் என விமர்சித்து வருவது பூமராங் போல ஏழைகளுக்கு எதிரான கட்சி என காங்கிரஸுக்கு எதிராக திரும்பியுள்ளது.

2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி முன்னிறுத்தப்படுகிறார். அப்போது பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர், நரேந்திர மோடியால் நாட்டின் பிரதமராகவே முடியாது.

Youth Congress magazine mocks PM Modi as chaiwallah

வேண்டுமானாலும் நரேந்திர மோடி டீ விற்பதற்காக இடம் ஒதுக்கி தருகிறோம் என ஏகடியம் பேசியிருந்தார். ஆனால் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராகிவிட்டார். அண்மைக் காலமாக, பாஜகவின் விமர்சனங்களுக்கு நாகரிகமாகவே காங்கிரசார் பதிலடி தர வேண்டும் என அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்து வருகிறார்.

இந்நிலையில் அகில இந்திய இளைஞர் காங்கிரஸின் ஆன்லைனின் ஊடகமான யுவ தேஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி குறித்து மீம்ஸ் போடப்பட்டிருந்தது. அதில் பிரதமர் மோடியை இங்கிலாந்து பிரதமர் தெரசா மே டீ விற்பனை செய்ய போகுமாறு கூறுவதாக சித்தரிக்கப்பட்டிருந்தது.

இது கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மீம்ஸை முன்வைத்து காங்கிரஸ் கட்சி ஏழைகளுக்கு எதிரானது என பாஜகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.அதேநேரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களும் இந்த மீம்ஸுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து யுவ தேஸ் அதிகாரப்பூர்வம ட்விட்டர் பக்கத்தில் இருந்து இந்த மீம்ஸ் நீக்கப்பட்டுவிட்டது. அத்துடன் மூத்த காங்கிரஸ் தலைவர்களிடம் யுவ தேஸ் நிர்வாகிகள் பகிரங்கமாக மன்னிப்பும் கோரியுள்ளனர்.

English summary
The Youth Congress's online magazine mocked PM Narendra Modi with a now-deleted the tweet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X