For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரளாவை உலுக்கிய ஆணவக் கொலை.. கண்ணை நோண்டி.. கொடூரமாக... 10 பேருக்கு இரட்டை ஆயுள்!

கோட்டயத்தில் நடந்த ஆணவ கொலையில் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    Kottayam Kevin Joseph honor killing case

    கோட்டயம்: கேரளாவில் கெவின் ஜோசப் கொலை வழக்கில் 10 குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி கோட்டயம் நகராட்சி அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    கடந்த வருடம் நடந்த இரட்டை கொலை சம்பவம் கேரளாவை உலுக்கியது நாம் மறந்திருக்க முடியாது. சம்பவம் இதுதான்:

    கோட்டயத்தில் உள்ள கல்லூரி அது. அங்கு படித்த ஒரு காதல் ஜோடிதான் கெவின் ஜோசப் - நீனு. 24 வயது இளைஞர் கெவின் ஒரு தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர். ஆதிக்க சாதி கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர் நீனு.

    கடத்தி கொலை

    கடத்தி கொலை

    வீட்டில் விஷயம் தெரிந்து எதிர்ப்பு. அதனால் கோட்டயத்தில் உள்ள ஒரு துணை பதிவாளர் அலுவலகத்தில் கடந்த மே 25-ம் தேதி ரிஜிஸ்டர் கல்யாணம் செய்து கொண்டனர். இதை கேள்விப்பட்டு, நீனுவின் வீட்டில் கொதித்து போய்விட்டனர். கெவின் வீட்டுக்கு அடியாள்களை அனுப்பி சூறையாடியதுடன், கெவினையும், அவரது நண்பர் அனிஷையும் கடத்தி சென்றனர். முதலில் அனீஷை அடித்து கொன்றுவிட்டு, போகிற வழியில் வீசிவிட்டனர்.

    ஆணுறுப்பு

    ஆணுறுப்பு

    இதனிடையே மே 28 அன்று கொல்லம் ஆற்றில் கெவினின் சடலத்தை கைப்பற்றியது போலீஸ். உடம்பெல்லாம் ரத்த காயங்கள். இரும்பு கம்பி, மரத்தடிகளால் அடிக்கப்பட்ட தடயங்கள் காணப்பட்டன. ஒரு கண்ணை காணோம். தோண்டி எடுத்துள்ளனர். அவரது அந்தரங்க உறுப்பு கடுமையாக சிதைக்கப்பட்டிருந்தது. துடித்து துடித்தே கெவின் இறந்துள்ளது உறுதியானது.

    குற்றவாளிகள்

    குற்றவாளிகள்

    இது ஒரு ஆணவ கொலை என்பதால் உடனடியாக வழக்கு நடைபெற துவங்கியது. இந்த ஆணவ கொலை வழக்கில் 14 பேர் மீது வழக்கு பதிவாகி, கோட்டயம் நகராட்சி அமர்வு நீதிமன்றம் ஆகஸ்ட் 22 ம் தேதி இந்த 14 பேரில் 10 பேர் குற்றவாளி என்று தீர்ப்பு சொன்னது. காதலியின் சகோதரர் சானு சாக்கோ, உட்பட ஷிபின் சஜாத், பாசில் ஷெரிப் இஷான் இஸ்மாயில், ரியாஸ் இப்ராஹிம்குட்டி, சானு ஷாஜகான் நியாஸ் மோன், மனு முரளிதரன், நிஷாத், ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, நீனுவின் தந்தை சாக்கோ ஜான் உட்பட 4 பேர் கடந்த 23-ம் தேதி விடுவிக்கப்பட்டனர்.

    இரட்டை ஆயுள்

    இரட்டை ஆயுள்

    மேற்கண்ட 10 குற்றவாளிகளுக்கும் தற்போது இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையை குற்றவாளிகள் ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அது மட்டுமில்லை.. ஒவ்வொரு குற்றவாளிக்கும் 40, ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

    ஆணவ கொலை

    ஆணவ கொலை

    தலா ஒன்றரை லட்சம் நீனு மற்றும் கெவின் தந்தை ஜோசப் ஆகியோருக்கு வழங்கப்பட வேண்டும். அதேபோல, கெவின் நண்பர் அனீஷுக்கும், ஒரு லட்சம் வழங்கப்படும் என இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. ஆணவ கொலை விவகாரம் என்பதால் ஆறே மாதத்தில் இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Kerala Court Sentences all ten convicts to double life term and compensation in Kottayam Kevin Joseph honor killing case
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X