• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

"செம ட்விஸ்ட்".. 24 வயசுதான்.. ஒன்னுல்ல.. ரெண்டு பொண்ணு.. அதுவும் ஒரே நேரத்தில்.. கலக்கிய இளைஞர்

Google Oneindia Tamil News

ராய்கட்: ஒரு பொண்ணை லவ் பண்ணி காதலித்து கல்யாணம் செய்யவே, சிலருக்கு நாக்கு வெளியே தள்ளிடுது.. இதுல 2 பொண்ணாம்.. அதுவும் ஒரே மேடையில் செம ட்விஸ்ட்டாக நடந்துள்ளது கல்யாணம்.. இதை பார்த்து காதில் புகைச்சலுடன் நெட்டிசன்கள் திருமண வாழ்த்து சொல்லி வருகிறார்கள்!

இந்த தகவலை ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.. சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த பகுதி பஸ்தார் மாவட்டம்.. இங்கு வசித்து வருபவர் சந்த் மவுரியா... இவருக்கு 24 வயதாகிறது

Youth Marries both his Lovers in same day

இவர் ஒரு விவசாயி.. பார்ட் டைம் வேலையாக கூலி தொழிலும் செய்து வருகிறார். அதாவது கரண்ட் கம்பங்களை நடுவதுதான் இவரது பார்ட் டைம் ஜாப்.

ஒருமுறை அப்படித்தான் தோகபால் என்ற பகுதிக்கு கரண்ட் கம்பம் நடும் வேலையில் ஈடுபட்டிருந்தார்.. அப்போதுதான் சுந்தரியை பார்த்தார்.. "சுந்தரி கண்ணால் ஒரு சேதி" என்று பார்த்த மாத்திரத்திலேயே லவ் வந்துவிட்டது.. சுந்தரிக்கு 21 வயசாகிறதாம்.. இருவரும் தீவிரமாக காதலித்தனர்.. வீட்டில் சொல்லி பெற்றோர் விருப்பத்துடன் கல்யாணம் செய்யவும் ஐடியா செய்தனர்.

ஆனால் பாருங்க, அதற்குள் ஹசீனா என்பவர் மவுரியா வாழக்கையில் நுழைந்துவிட்டார்.. எங்கோ ஒரு ரிசப்ஷனுக்கு போனாராம் மவுரியா.. அங்கேதான் ஹசீனாவை பார்த்திருக்கிறார்.. பார்த்ததும் லவ் வந்துவிட்டது.. ஹசீனாவிடம் தன் காதலை சொன்னபோது, கூடவே தன்னுடைய சுந்தரியுடனான காதலையும் சேர்த்து சொல்லிவிட்டார். இது தெரிந்ததும் ஹசீனா, ஆத்திரமடைவார் என்று பார்த்தால், சட்டென ஓகே சொல்லிவிட்டாராம்.. இது மவுரியாவுக்கே கொஞ்சம் ஷாக்தான்.

இதன்பிறகு சுந்தரியிடம் விஷயத்தை சொல்ல, அவர் அதற்கு மேல் டக்கென ஓகே சொன்னாராம்.. அப்பறம் என்ன, 3 பேரும் கல்யாணம் செய்ய முடிவெடுத்தனர். வீட்டு பெற்றோர்களும் ஓகே சொன்னார்கள்.. ஆனால் அங்கேதான் ஒரு ட்விஸ்ட்.. கல்யாணம் நடப்பதற்கு முன்பேயே 3 பேரும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ ஆரம்பித்துவிட்டனர்.. இதைவிட ஆச்சரியம், அதே வீட்டில் மவுர்யாவின் அப்பா, அம்மா, 2 சகோதரர்களும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

Youth Marries both his Lovers in same day

இதற்கு பிறகு, ஒருவழியாக ஊர் அறிய கல்யாணம் செய்ய முடிவெடுத்து, அதன்படி கிராமத்தையே அழைத்து சம்பிரதாய முறைப்படி கல்யாணம் நடந்தது. சுந்தரியின் வீட்டில்தான் கொஞ்சம் எதிர்ப்பு போல தெரிகிறது.. அவர்கள் மட்டும் இந்த கல்யாணத்திற்கு வரவில்லை... எனினும் இதை பற்றி சுந்தரி சொல்லும்போது, எப்படியும் என் அப்பா, அம்மா என்னை தேடி வருவார்கள்.. ஒருநாளை என்னை மன்னித்து ஏற்று கொள்வார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது என்கிறார்.

அதிமுக எம்எல்ஏக்கள் மருதமுத்து, சின்னத்தம்பிக்கு கொரோனா தொற்று உறுதி - மருத்துவமனையில் சிகிச்சைஅதிமுக எம்எல்ஏக்கள் மருதமுத்து, சின்னத்தம்பிக்கு கொரோனா தொற்று உறுதி - மருத்துவமனையில் சிகிச்சை

இப்போது மவுரியா 2 மனைவிகளுடன் படுசவுக்கியமாக இருக்கிறாராம்.. 2 புது பொண்டாட்டிகளும் மவுரியாவை நன்றாக கவனித்து கொள்கிறார்களாம்.. 2 மனைவிகளுக்குள்ளும் எந்த சண்டை சச்சரவும் இல்லையாம்.. "2 பேருமே தன்னை அளவுக்கு அதிகமாக நேசித்ததால்தான், அவர்களை கல்யாணம் செய்ய துணிந்தேன்.. யாரை ரொம்ப பிடிக்கும் என்றெல்லாம் சொல்ல முடியாது.. இருவருமே எனக்கு உயிர்தான்" என்கிறார் இந்த புதுமாப்பிள்ளை.

இவர்களின் கல்யாண போட்டோக்கள் இணையத்தில் வைரலாகியும் வருகின்றன.. அதை பார்த்த நெட்டிசன்கள் மகிழ்ச்சியும், வயிற்றெரிச்சலுமாக வாழ்த்து சொல்லி வருகின்றனர்!

English summary
Youth Marries both his Lovers in same day and video goes viral on socials
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X