For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோடி அரசுக்கு எதிரான ஒய்எஸ்ஆர் காங். நம்பிக்கை இல்லா தீர்மானம் வெல்லுமா?

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு அக்னி பரீட்சையாக நம்பிக்கை இல்லா தீர்மானம் காத்திருக்கிறது.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெல்லுமா?

    டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு முதலாவது அக்னி பரீட்சையாக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை இன்று எதிர்கொள்கிறது.

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத மத்திய அரசுடன் தெலுங்குதேசம் கட்சி மல்லுக்கட்டி வருகிறது. இதனால் பாஜக- தெலுங்குதேசம் உறவும் விரிசலடைந்தது.

    ஆனாலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தெலுங்குதேசம் நீடித்து வருகிறது. நாடாளுமன்றத்தில் தெலுங்குதேசம், ஒய்எஸ்ஆர் காங் எம்பிக்கள் தொடர்ந்து குரல் எழுப்பி போராடி வருகின்றனர்.

    ஒய்எஸ்ஆர் காங். அதிரடி

    ஒய்எஸ்ஆர் காங். அதிரடி

    இந்நிலையில்தான் அதிரடியாக மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அறிவித்தது. வெறும் 9 எம்.பிக்களைக் கொண்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் இந்த அதிரடி அறிவிப்பு ஆந்திராவின் ஆளும் தெலுங்குதேசத்தை நெருக்கடிக்குள்ளாக்கியது.

    50 எம்.பிக்கள் ஆதரவு

    50 எம்.பிக்கள் ஆதரவு

    இதனால் தெலுங்குதேசமும் இந்த தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. லோக்சபாவில் தெலுங்குதேசம் கட்சிக்கு 16 எம்.பிக்கள் உள்ளனர். ஒரு நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சபை ஏற்க 50 எம்.பிக்கள் ஆதரவு தேவை.

    பாஜக, கூட்டணிகள் பலம்

    பாஜக, கூட்டணிகள் பலம்

    இதற்காக எதிர்க்கட்சிகளுக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பும் விடுத்திருக்கிறார். பாஜகவுக்கு லோக்சபாவில் 272 எம்பிக்கள் உள்ளனர். அதன் கூட்டணி கட்சிகளுக்கு 56 எம்.பிக்கள் உள்ளனர்.

    தீர்மானம் தோற்கும்

    தீர்மானம் தோற்கும்

    இந்நம்பிக்கை இல்லா தீர்மானத்தை லோக்சபா ஏற்றுக் கொண்டாலும் நிச்சயம் தோல்வி அடையவே வாய்ப்பிருக்கிறது. இருப்பினும் இது பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு கடும் நெருக்கடியையே உருவாக்கி இருக்கிறது என்பதுதான் யதார்த்தம்.

    English summary
    YSR Congress has Nine and TDP 16 MPs in the Lok Sabha, A no-confidence motion requires the support of 50 MPs. If no-confidence motion accepted, it is to be defeated.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X