For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆந்திர சிறப்பு அந்தஸ்து.. லோக்சபா துணை சபாநாயகர் பதவியை தூக்கி எறிந்த ஜெகன்மோகன்?

Google Oneindia Tamil News

Recommended Video

    முதல் அமைச்சரவை கூட்டத்தில் ஜெகன் எடுத்த ஆச்சர்ய முடிவுகள்

    டெல்லி: ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் வரை லோக்சபா துணை சபாநாயகர் பதவி தங்களுக்கு வேண்டாம் என ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    லோக்சபா தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டசபை தேர்தலும் நடைபெற்றது. இதில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 150-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி ஆட்சியை பெற்றது.

    அது போல் மக்களவை தேர்தலிலும் மொத்தமுள்ள 25 இடங்களில் 22 தொகுதிகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதன் மூலம் நாடாளுமன்றத்தில் 4-ஆவது பலம் பொருந்திய கட்சியாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உருவெடுத்துள்ளது.

    அதிகாரப்பூர்வம்

    அதிகாரப்பூர்வம்

    இந்த நிலையில் மக்களவை துணை சபாநாயகர் பதவியை ஆந்திர மாநிலத்தின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு தர பாஜக விரும்புவதாக தகவல்கள் தெரிவித்தன. எனினும் இச்செய்தி அதிகாரப்பூர்வமாக பாஜக சார்பில் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    பங்கு

    பங்கு

    இதுகுறித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கூறுகையில் எங்கள் கட்சிக்கு எந்த பதவியும் தேவையில்லை. அப்படி பெற்றுக் கொண்டால் ஆட்சியில் பங்குப் பெற்றதாக பார்க்கப்பட்டுவிடும்.

    எதிர்க்கட்சிகள்

    எதிர்க்கட்சிகள்

    ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கும் வரை எங்களுக்கு எந்த பதவியும் வேண்டாம். இந்த சிறப்பு அந்தஸ்து கிடைக்காமல் இருப்பதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்தான் காரணம்.

    ஆதரவு கிடைக்கும்

    ஆதரவு கிடைக்கும்

    இரண்டாக பிரிக்கப்பட்ட பிறகும் இன்னும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படவில்லை. எனவே காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளில் இருந்து விலகி நிற்கவே விரும்புகிறோம். எனினும் நாட்டுக்கு நலனை தரும் பல்வேறு விஷயங்களில் ஆளும் கட்சிக்கு எங்கள் கட்சியின் ஆதரவு கிடைக்கும். இதுகுறித்து பாஜக தலைமையிடம் எங்கள் நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டோம் என்றார்.

    திமுக தலைவர் ஸ்டாலின்

    திமுக தலைவர் ஸ்டாலின்

    மொத்தம் 37 தொகுதிகளில் வெற்றி மக்களவையில் 3-ஆவது பெரிய கட்சியாக திமுக விளங்குகிறது. கடந்த முறையும் அதிமுக சார்பில் 37 இடங்களில் வெற்றி பெற்ற அதிமுகவுக்கே மக்களவை துணை சபாநாயகர் பதவி வழங்கப்பட்டது. எனவே இப்பதவியானது மத்திய அரசை யாருக்கு கொடுக்க விரும்புகிறதோ அவர்களுக்கே கொடுக்கும். திமுக தலைவர் ஸ்டாலின் பாஜகவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருவதால் அக்கட்சியை விட்டுவிட்டு ஜெகன்மோகன் கட்சியை பாஜக அணுகியிருக்கலாம் என தெரிகிறது.

    English summary
    YSR Congress party is unlikely to accept the post of Loksabha Deputy Speaker as it demands special status for Andhra.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X