For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்ன ஒரு கேவலமான டான்ஸ்!: சானியா, மாலிக் டப்ஷ்மாஷ் வீடியோ விமர்சித்த யுவி

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது கணவர் சோயப் மாலிக்குடன் சேர்ந்து வெளியிட்ட டப்ஷ்மாஷ் வீடியோவை கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் விமர்சித்துள்ளார்.

Yuvraj Singh criticises Sania Mirza's dubsmash video

இலங்கையில் விளையாடி வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த 19ம் தேதி கொழும்பு நகரில் நடந்த மூன்றாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது. இலங்கையை வீழ்த்திய பாகிஸ்தான் வீரர்கள் அதை டப்ஷ்மாஷ் வீடியோ மூலம் கொண்டாடியுள்ளனர். கொண்டாட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும், தனது கணவருமான சோயப் மாலிக்குடன் சேர்ந்து டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் டான்ஸ் ஆடியுள்ளார்.

இந்த டப்ஷ்மாஷ் வீடியோவை சானியாவும், மாலிக்கும் தங்களின் ட்விட்டர் கணக்குளில் வெளியிட்டுள்ளனர். இதை பார்த்த கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

சிறப்பான விளையாட்டு வீரர், வீராங்கனை. ஆனால் மோசமான டான்சர்கள் என்று தெரிவித்துள்ளார். அந்த ட்வீட்டை சோயப் மாலிக் ரீட்வீட் செய்தார். இந்நிலையில் யுவராஜ் தனது ட்வீட்டை அழித்துவிட்டார்.

சானியா தற்போது இலங்கையில் தங்கி தனது கணவருக்கு ஆதரவாக உள்ளார்.

English summary
Cricketer Yuvraj Singh criticised tennis star Sania Mirza and her cricketer husband Shoaib Malik's Dubsmash video.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X