For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆயிரத்திற்கும் அதிகமான ரோபோட்கள் ஒன்றாக சேர்ந்து ஆட்டம்... எந்திரனுக்கு சவால் விட்டு சாதனை!

வட கொரியாவில் 1069 ரோபோட்கள் ஒன்றாக சேர்ந்து ஒரே மாதிரி நடனமாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

வட கொரியா: வட கொரியாவில் 1069 ரோபோட்கள் ஒன்றாக சேர்ந்து ஒரே மாதிரி நடனமாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. ஆட்டிபிசியல் இண்டலிஜெண்ட் என்ற தொழிநுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோட்கள் தொடர்ச்சியாக ஒலிபரப்பான பாடல்களுக்கு ஒரே மாதிரி நடனம் ஆடியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

உலகின் எதிர்காலம் ஆர்டிபிசியல் இண்டலிஜெண்ட் கைகளில்தான் இருக்கிறது என்று அறிவியலாளர்களால் சொல்லப்படுவது வழக்கம். தானாக எந்திரமே சிந்திக்கும் திறனுக்கு பெயர்தான் ஆர்டிபிசியல் இண்டலிஜெண்ட். இந்த தொழில்நுட்ப்பத்தை வைத்து நிறைய வித்தியாசமான செயல்களை செய்ய முடியும். ஆப்பிள் போனில் இருக்கும் 'சிறி' மென்பொருள், விண்டோசில் இருக்கும் 'கார்டோனா' மென்பொருள் என எல்லாம் ஆர்டிபிசியல் தொழில்நுட்பம் மூலமே உருவாக்கப்பட்டதுதான்.

 1,069 dancing robots made new Guinness World Record

இந்த நிலையில் வட கொரியா இந்த தொழிநுட்பத்தை பயன்படுத்தி கின்னஸ் சாதனை புரிந்துள்ளது. இந்த தொழிநுட்பம் மூலம் 1069 ரோபோட்கள் உருவாக்கப்பட்டு அவை ஒரே நேரத்தில் ஆட வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த ரோபோட்டுக்கள் அனைத்தும் தங்களுக்குள்ளாகவே தகவல்களை பரிமாறிக் கொண்டு புதுப் புது ஸ்டைலில் ஆடி இருக்கின்றன.

எந்திரன் படத்தில் நிறைய சிட்டி ரோபோக்கள் ஒன்றாக சேர்வதும் , பிரிவதும் எப்படி பிரமிப்பை ஏற்படுத்தியதோ அது அப்படியே நிஜத்தில் நடந்துள்ளது. இதன் மூலம் வட கொரிய புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்பு இதே போல் 1007 ரோபோட்டுக்கள் சீனாவில் 2016ல் ஒன்றாக நடனமாடியது குறிப்பிடத்தக்கது.

இந்த சாதனையை ஒருங்கிணைத்த அறிவியலாளர் இலான் முஸ்க் இதுகுறித்து பேசிய போது ''உலகில் எல்லோரும் வட கொரியாவை பார்த்து பயந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் நாங்களும் சேர்த்து பயப்படும் ஒரே விஷயம் இந்த ஆர்டிபிசியல் இண்டலிஜெண்ட் மட்டும்தான். இது எதிர்காலத்தில் பலரின் வேலையை பறித்து இருக்கும். மக்களின் வாழ்க்கையை இன்னும் எளியதாக மாற்றி இருக்கும். அதற்கு ஒரு முன்னோட்டமாக தான் இந்த நடன நிகழ்ச்சியை நிகழ்த்திக் காட்டினோம்'' என்றார்.

English summary
1,069 dancing robots made new Guinness World Record in Northa Korea. Robots made by artificial intelligence gave a best dance performance of this century.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X