For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்காவில் மூன்றில் ஒருவர் “ராக்கோழி”யாம் - ஆய்வு சொல்லும் அதிர்ச்சி தகவல்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க மக்களில் முக்கால்வாசிக்கும் மேற்பட்டோர் இரவில் சரியான தூக்கம் இல்லாமல் உடல் பருமன் உள்ளிட்ட அவஸ்தைகளில் சிக்கி அவதியுறுவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

7 மணி நேர அயர்ந்த தூக்கம் இருந்தால் மட்டுமே உடல் நலம் நன்றாக இருக்கும். தூக்கம் கெட்டால் உடல் நலம் பாதித்து பல்வேறு நோய்கள் ஏற்படும்.

1 in 3 Americans Not Getting Enough Sleep: Study

எனவே நாள் ஒன்றுக்கு குறைந்தது 7 மணி நேரமும், அதிகபட்சமாக 8 மணி நேரமும் தூங்க வேண்டும் என்ற கருத்து உலகளவில் பரவலாக நிலவுகிறது.

4 லட்சம் பேரிடம் ஆய்வு:

இந்த நிலையில் அமெரிக்காவில் 50 மாகாணங்களில் 4 லட்சத்து 44 ஆயிரத்து 306 பேரிடம் தூக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தூக்கமே கிடையாது:

அவர்களில் மூன்றில் ஒரு பங்கு அமெரிக்கர்கள் இரவில் சரியாக தூங்குவதில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

டீன் ஏஜ் வயசுதான் காரணம்:

குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள், டீன் ஏஜ் பருவத்தினர்தான் போதுமான அளவு தூங்குவதில்லை என தெரியவந்துள்ளது.

உடலுக்கு கேடு:

இதனால் உடல்பருமன், நீரிழிவு, இதய நோய்கள், மன நோய்கள் மற்றும் பலவிதமான நோய்களால் அவதிப்படுகின்றனர். எனவே, தூக்கமின்மை உடல் நலனுக்கு கேடு என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
More than one out of three Americans are sleep-deprived, according to a new study by the Centers for Disease Control and Prevention, or CDC.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X