For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீர் விஷயத்தில் மூக்கை நுழைத்த சீனா மூக்கை உடைத்த ஹாங்காங்.. 17 லட்சம் பேர் வீதிகளில் இறங்கினர்

Google Oneindia Tamil News

Recommended Video

    காஷ்மீர் விஷயத்தில் தலையிட்டு ஹாங்காங்கில் மூக்குடைபட்ட சீனா

    ஹாங்காங்: ஹாங்காங்கில் நேற்று ஒரே நேரத்தில் சுமார் 17 லட்சம் போராட்டக்காரர்கள் தெருவில் இறங்கி ஸ்தம்பிக்க வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஹாங்காங்கில் குற்ற வழக்குகளில் சிக்குபவர்களை சீனா கொண்டு சென்று விசாரிக்கும் வகையில் மசோதா கொண்டு வரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங்கில் மனித உரிமை அமைப்பினர், ஜனநாயக ஆதரவு அமைப்பினர் கடந்த 3 மாதமாக வார இறுதி நாட்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    நேற்று ஹாங்காங் பூங்காவில் இருந்து பேரணி தொடங்கியது. கனமழையையும் பொருட்படுத்தாமல், குடைகளுடன் லட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    கொழும்பை அதிர வைத்த ஜே.வி.பி. பேரணி- அதிபர் வேட்பாளராக அனுரகுமார திசநாயக்க போட்டி! கொழும்பை அதிர வைத்த ஜே.வி.பி. பேரணி- அதிபர் வேட்பாளராக அனுரகுமார திசநாயக்க போட்டி!

    தலைவர் இல்லாத இயக்கம்

    தலைவர் இல்லாத இயக்கம்

    கோடைகால மழையையும், அணிவகுக்க வேண்டாம் என்ற போலீஸ் உத்தரவையும் மீறி, லட்சக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஹாங்காங்
    மையப்பகுதி முழுவதும் குவிந்தனர். பல வாரங்களாக நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்கள் நிதி நிலைமையை நெருக்கடிக்கு தள்ளியுள்ள நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கான பெரிய போராட்டமாக இது அமைந்தது. ஏனெனில் இந்த பேரணியில் 1.7 மில்லியனுக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். தலைவரே இல்லாத எதிர்ப்பு இயக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    போராட்டம் வலிமை

    போராட்டம் வலிமை

    "இது ஒரு நீண்ட நாள் போராட்டம், நாங்கள் மிகவும் சோர்வாக இருக்கிறோம், ஆனால் ஹாங்காங்கில், மழைக்கு நடுவே, அணிவகுப்பில் பங்கேற்க பலர் வெளியே வருவது பலத்தைத் தருகிறது "என்று 28 வயதான கிராஃபிக் டிசைனர், டேனி டாம் தெரிவிக்கிறார். சமூக ஊடகங்களின் வழியாக இந்த போராட்டக்காரர்கள் கூடியதாக கூறப்படுகிறது. கண்ணீர்ப்புகை, தடியடி,மற்றும் ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தி துப்பாக்கி சூடு போன்றவற்றை காவல்துறையினர் நடத்தியிருந்தனர். இது போராட்டத்தை மேலும் கூர்மையாக்கவே உதவியுள்ளது.

    ஹாங்காங் மீட்பு

    ஹாங்காங் மீட்பு

    நேற்றைய பேரணியில் பங்கேற்றவர்களில், பலர் எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பொருட்களை எடுத்துச் சென்றனர். லேசர் பேனாக்கள், கண்ணூர் புகை குண்டுகளை எதிர்கொள்ளும் வகையிலான, முகமூடிகள், கண்ணாடி மற்றும் தலைக்கவசங்களை அவர்கள் அணிந்திருந்தனர். அரசு தலைமையகம் எதிரே கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், "ஹாங்காங்கை மீட்டுக் கொள்ளுங்கள், இது எங்கள் காலத்தின் புரட்சி" என்று கோஷங்களை எழுப்பினர். ஒருபக்கம் காஷ்மீர் விவகாரத்தில் ஐநா சபையில் பிரச்சினை கிளப்பி பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது சீனா. ஆனால் இப்போது சீனாவின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்ட ஹாங்காங் கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது.

    சீனாவின் காஷ்மீர்

    1997ம் ஆண்டு, சீனாவின் ஒருபகுதியாக ஹாங்காங் இணைக்கப்பட்டது. வெளிநாட்டு மற்றும் பாதுகாப்பு விவகாரங்களைத் தவிர்த்து, அதிக அளவில் சுயாட்சியை ஹாங்காங் அனுபவிக்கும் வகையில் சலுகை வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The rain has started to pour in Hong Kong, but that hasn't put off the thousands of protesters huddling under umbrellas in Victoria Park.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X