• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிங்கப்பூர் குடவுனில் தீவிபத்து - ஒருவர் பலி ; 7 பேர் படுகாயம்

Google Oneindia Tamil News

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் ஜூரோங் பகுதியிலுள்ள தஞ்சோங் கிலிங் என்ற இடத்தில் அமைந்திருக்கும் கிடங்கு ஒன்றில் இன்று காலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 7 பேர் காயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படை தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. எனினும் அங்கு வெடிவிபத்து ஏற்பட்டதாக சிங்கப்பூர் வாசிகள் தெரிவித்துள்ளதாக செய்தித்தளம் ஒன்று கூறியுள்ளது.

சேத விவரங்கள் இன்னும் முழுமையாகத் தெரியாத நிலையில் அங்கு மிகப் பெரிய அளவிலான மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் அப்பகுதியைத் தவிர்க்கும் படியும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்தச் சம்பவத்தில் ஒருவர் பலியாகியிருப்பதாகவும், 7 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

English summary
At least one person died and seven were injured in a large factory blaze at Tanjong Kling Road in Singapore. Witnesses filmed the site erupting in explosions and thick billowing smoke.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X