For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆடிப்பாடிக் கொண்டே ஆபரேசன்.. அமெரிக்க பெண் டாக்டர் மீது 100க்கும் மேற்பட்டோர் புகார்!

ஆடிக்கொண்டே ஆபரேசன் செய்ததாக அமெரிக்க மருத்துவர் மீது 100 பெண்கள் புகார் அளித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் பெண் மருத்துவர் ஒருவர் ஆபரேசன் தியேட்டரில் ஆடிப்பாடிக் கொண்டு கவனக்குறைவாக செயல்பட்டதால் பாதிக்கப்பட்டதாக சுமார் நூறு பெண்கள் புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் அட்லாண்டாவைச் சேர்ந்த தோல் நோய் மற்றும் முக அழகு சிறப்பு சிகிச்சை நிபுணர் விண்டெல் பூட்டே. இந்த பெண் மருத்துவருக்கு வினோத பழக்கம் ஒன்று இருந்துள்ளது. அதாவது ஆபரேசன் தியேட்டருக்குள் நோயாளிகளுக்கு அறுவைச் சிகிச்சை செய்யும் போது, ஆடிப்பாடிக் கொண்டே செய்வது இவரது வழக்கம்.

100 complaints against american dancing doctor

இது தொடர்பான வீடியோக்களை அவ்வப்போது தனது சமூகவலைதளப் பக்கத்தில் பூட்டே பதிவேற்றம் செய்து வந்துள்ளார். அந்த வீடியோக்களில் நோயாளிகள் மயக்க நிலையில் படுத்திருக்க, ஆபரேசன் தியேட்டருக்குள் இசைக்கு ஏற்ப பூட்டே நடனமாடுகிறார். பூட்டேவுடன் அங்கிருக்கும் மருத்துவ ஊழியர்களும் சேர்ந்து நடனமாடுகின்றனர்.

சமூகவலைதளங்களில் வைரலான இந்த வீடியோக்களைப் பார்த்து சம்பந்தப்பட்ட நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். பூட்டே அறுவைச் சிகிச்சை செய்த பல நோயாளிகள் தற்போதும் சில உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, அறுவைச் சிகிச்சைக்குப் பிறகான உடல் உபாதைகளுக்கு பூட்டேவின் அலட்சியமே காரணமாக இருக்கலாம் என அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து பூட்டேவுக்கு எதிரான சில பெண்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். 100க்கும் மேற்பட்ட பெண்கள் பூட்டேவுக்கு எதிராக புகார் கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக பூட்டேவோ அல்லது அவரது மருத்துவமனை தரப்பிலோ எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Nearly 100 women say they have suffered complications after a US dermatologist arranged to have herself filmed singing and dancing during their surgery, according to an attorney.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X