For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் 13 பேரை விடுதலை செய்தது நேபாளம்!!

By Mathi
Google Oneindia Tamil News

காத்மாண்டு: தங்கள் நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படைகளில் ஒன்றான எஸ்.எஸ்.பி.யின் வீரர்கள் 13 பேரை நேபாளம் கைது செய்த நேபாளம் பின்னர் அவர்களை விடுதலை செய்தது. இதனால் இந்தியா-நேபாளம் இடையேயான உறவு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் அண்மையில் 'மதச்சார்பற்ற' புதிய அரசியல் சாசனம் பிரகடனம் செய்யப்பட்டது. உலகின் ஒரே இந்துநாடான நேபாளத்தின் இந்நடவடிக்கையில் இந்தியா அதிருப்தி அடைந்தது.

12 SSB soldiers Detained Near India-Nepal Border

மேலும் நேபாளம் வாழ் இந்திய வம்சாவளியினர் புதிய அரசியல் சாசனத்துக்கு எதிரான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தப் போராட்டத்தால் இந்தியாவில் இருந்து நேபாளத்துக்கு அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் சரக்கு லாரிகள் கடந்த பல மாதங்களாக நேபாள எல்லையில் தேங்கி நிற்கின்றன.

இதனால் நேபாளம் கடும் நெருக்கடிக்குள்ளாகி உள்ளது. இந்தியா தங்கள் மீது அதிகாரப்பூர்வமற்ற ஒரு பொருளாதார தடைய விதித்துள்ளதாக நேபாள நாட்டினர் குற்றம்சாட்டி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேபாள எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக சாஷ்ஹஸ்ரா சீமா பால் (எஸ்.எஸ்.பி) எனப்படும் எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 13 வீரர்களை நேபாளம் கைது செய்துள்ளது. எல்லைப் பகுதியில் டீசல் கடத்தல் தொழிலில் ஈடுபட்ட கடத்தல்காரர்களைத் தேடும் நடவடிக்கையின் போது 13 பேரும் வழிதவறி நேபாள எல்லைக்குள் நுழைந்ததாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து 13 பேரையும் நேபாளம் இன்று காலை கைது செய்தது. பின்னர் தீவிர விசாரணைகளின் பின்னர் 13 பேரையும் விடுதலை செய்வதாக நேபாளம் அறிவித்தது.

ஏற்கனவே இந்தியா -நேபாள உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் இக்கைது நடவடிக்கை இருநாடுகளிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.

English summary
12 Sashastra Seema Bal (SSB) soldiers were detained by Nepal's border guarding force along the Indo-Nepal border today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X