For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆஸ்திரேலியாவில் தீவிரவாத செயலுக்காக கண்காணிக்கப்படும் 12 வயது சிறுவன்

By Siva
Google Oneindia Tamil News

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் அண்மையில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் 12 வயது சிறுவன் ஒருவரின் நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறார்கள்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பாரமாட்டாவில் இருக்கும் என்.எஸ்.டபுள்யூ தலைமை காவல் நிலையத்தில் வைத்து காவல் நிலைய கணக்காளர் கர்டிஸ் செங் என்பவர் 15 வயது பர்ஹத் ஜப்பார் என்பவரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆஸ்திரேலிய பெடரல் போலீசார் 12 வயது சிறுவன் ஒருவரை கண்காணித்து வருகிறார்கள்.

இது குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் கூறுகையில்,

போலீஸ் அலுவலக கணக்காளர் 15 வயது சிறுவனால் சுடப்பட்டது இளம்வயதில் தீவிரவாதம் பக்கம் செல்வதை காண்பிக்கறது. இது வருந்தக்கூடியது என்றார்.

போலீஸ் கமிஷனர் ஆன்ட்ரூ கோல்வின் கூறுகையில்,

ஆஸ்திரேலியாவில் பிரச்சனை மோசமாகிக் கொண்டிருக்கிறது. தீவிரவாதம் போன்ற செயல்களுக்காக 12 வயது சிறுவன் கண்காணிக்கப்படுவது எங்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது போலீசாரின் கடமை என்பதால் எங்களின் பங்கு முக்கியம். போலீசாரால் அனைத்து இடங்களிலும் இருக்க முடியாது. அதே சமயம் அனைவரையும் கண்காணிக்கவும் முடியாது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

English summary
Australian Federal Police today said the trend of youth coming under the police radar is "very concerning", as it confirmed that a 12-year-old boy was being monitored in connection with a recent shooting incident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X