For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உங்ககிட்ட மட்டுமில்ல 1200 வருசத்துக்கு முன்னாடியே ”டேப்லட்” கணினி இருந்திருக்காம்!!

Google Oneindia Tamil News

இஸ்தான்புல்: துருக்கியில் 1200 ஆண்டுகளுக்கு முன்பான பழமையான டேப்லட் கணினி இருந்தது தெரிய வந்துள்ளது. அதை தொல் பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

துருக்கியை சேர்ந்த தொல் பொருள் ஆய்வாளர்கள் 1200 ஆண்டுகளுக்கு முந்தய மரத்தாலான ஒரு பொருளை கண்டறிந்துள்ளனர்.

இது டேபிளட் கம்யூட்டருக்கு இணையான பழைய பொருளாக இருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கப்பல் சிதைவில் கண்டுபிடிப்பு:

துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல் நகர் அருகே உள்ள யேனிகாபி பகுதியில்,தோண்டி எடுக்கப்பட்ட பழமையான 37 கப்பல் சிதைவுகளில் ஒன்றில் இருந்து இந்த பொருள் கண்டறியப்பட்டுள்ளது.

பழமையான வணிகப்பகுதி:

நான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த தியோடோசியஸ் துறைமுகம், பைசண்டைன் பேரரசர் ஆட்சிக் காலத்தில் நகரின் முக்கியமான வணிகத் துறைமுகமாகவும் விளங்கி வந்துள்ளது.

மரத்தாலான டேபிளட்:

இந்த பகுதியில் இருந்து தற்போது கண்டறியப்பட்ட இந்த மரத்திலான பொருளானது, மரச்சட்டங்களால் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் அளவு "7 இன்ச்"கள் கொண்டதாகவும் நவீன டேபிளட் கம்யூட்டர் போன்று காணப்படுகிறது.

கப்பல் கேப்டனுக்கானது:

ஆனால் இது மிகவும் வலுவுள்ளதாக காணப்படுகிறது. உத்தேசமாக இதை கப்பல் கேப்டன் பயன்படுத்தியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

கிரேக்க மொழி எழுத்துகள்:

செவ்வக வடிவில் இதன் மரச்சட்டம் அதாவது பேனல் அமைந்துள்ளது. மெழுகு பொருட்களும் அதில் பூசப்பட்டுள்ளது. இதன் பேனல்களின் கிரேக்க மொழியில் எழுதவும் பட்டிருக்கிறது.

ஆய்வில் தகவல்:

இந்த தகவலை இஸ்தான்புல் பல்கலைக்கழகத்தின் கடல் தொல்லியல் ஆய்வு துறையின் இயக்குநர் தயாரித்த ஒரு ஆய்வு திட்டத்தில் இதை தெரிவித்தாக ஹூரியத் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.

English summary
Turkish archaeologists have discovered a 1,200-year-old wooden object which they claim is an ancient equivalent of a tablet computer. The device was found within the remains of one of the 37 ships unearthed in the Yenikapi area of Istanbul, the Turkish capital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X