For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிங்கப்பூரில் 13 இந்தியர்களுக்கு ஜிகா பாதிப்பு.. சுஷ்மா சுவராஜ் பயணம் ரத்து!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இன்று நடக்கவிருந்த இந்தியப் பெருங்கடல் மாநாடு 2016ல் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. சிங்கப்பூர் வாழ் வரும் 13 இந்தியர்களுக்கு ஜிகா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தகவலையடுத்து சுஷ்மா பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிங்கப்பூரில் நேற்று 26 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று நோய் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

13 Indians test positive for Zika in Singapore

இதையடுத்து ஜிகா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டின் சுகாதரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கிடையில் ஜிகா வைரஸ் பரவலின் காரணமாக, சிங்கப்பூருக்கு யாரும் செல்ல வேண்டாம என அமெரிக்கா தன் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் அந்நாட்டுக்குச் செல்ல வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.

இதேபோல் ஆஸ்திரேலியா, தென் கொரியா, சீனாவின் தைவான் உள்ளிட்ட நாடுகளும் தம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் வாழ்ந்து வரும் 13 இந்தியர்களுக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக சிங்கப்பூரில் உள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் உள்ள இந்தியர்கள் 13 பேருக்கு ஜிகா வைரஸ் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, தனது பயணத்தை சுஷ்மா சுவராஜ் ரத்து செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், காணொளி காட்சி வாயிலாக சிங்கப்பூரில் நடக்கவுள்ள இந்திய கடல்சார் மாநாட்டின் நிகழ்ச்சிகளில் சுஷ்மா சுவராஜ் கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The ministry of external affairs has confirmed that thirteen Indian nationals have tested positive for Zika virus in Singapore, Reuters reported on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X