For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வயசுக்கு வந்தால் போதும்... பெண்ணை கடத்தி கல்யாணம் செய்யலாம்.. தப்பில்லை.. பாக். கோர்ட் ஷாக் தீர்ப்பு

சிறுமியை கடத்தி திருமணம் செய்தது செல்லும் என பாக்.கோர்ட் உத்தரவிட்டுள்ளது

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: "பொண்ணு வயசுக்கு வந்தாச்சு இல்லே.. அப்ப கடத்திட்டு போய் தாலி கட்டறது ஒன்னும் தப்பு இல்லை" என்று பாகிஸ்தான் கோர்ட் தீர்ப்பு சொல்லி உள்ளது உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.. 14 வயது சிறுமியின் கட்டாய திருமணத்தை அங்கீகரித்து பாகிஸ்தான் கோர்ட் இவ்வாறு தீர்ப்பு சொல்லி உள்ளது!

பாகிஸ்தானில் வசித்து வருகிறார் 14 வயது சிறுமி.. கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்.. ஹுமா என்பது இந்த பெண்ணின் பெயர்!

14 year old girl forced to marry and pakistan court approves it

கடந்த வருடம் அக்டோபா் மாதம் இந்த பெண்ணை சிலர் கடத்தி விட்டதாக, அவரது பெற்றோர் யூனிஸ் - நகீனா மஸை தம்பதி குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும், ஹுமாவை இஸ்லாம் மதத்துக்கு மாற்றியதுடன், அப்துல் ஜாபா் என்பவருக்கு வலுக்கட்டாயமாக மகளை கல்யாணம் செய்து வைத்ததாகவும் பெற்றோர் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடா்பாக சிந்து ஹைகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தனர்.. அந்த வழக்கை கோர்ட் விசாரித்தது.. அப்போது நீதிபதிகள் சொன்னதாவது, "ஹுமாவுக்கு திருமண வயது வரவில்லைதான்.. ஆனால் அவர் வயசுக்கு வந்தாச்சு அல்லவா? மாதவிடாய் பருவம் வருவதால் இஸ்லாமிய ஷரியா சட்டத்தின்கீழ் அவரது திருமணம் செல்லும்" என்று தீர்ப்பளித்தனர்.

இந்த தீர்ப்பை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். சுப்ரீம் கோர்ட்டில் அப்பீலுக்கு போவதாக சொல்லி உள்ளனர்.. அதனால் இந்த வழக்கு முடியும்வரை ஹுமாவை பெண்கள் காப்பகத்தில் தங்கவைக்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்து வருகின்றனர்.

கடத்தி கட்டாய கல்யாணம் செய்து வைக்கப்பட்ட சிறுமியின் திருமணத்தை ஹைகோர்ட்டே அங்கீகரித்ததுடன், பெண்கள் பூப்பெய்திவிட்டாலே திருமணத்திற்கான வயதை எட்டிவிட்டதாக கருதலாம் என்று தீர்ப்பளித்துள்ளது பெரும் சர்ச்சையையும், அதிர்ச்சையும் ஏற்படுத்தியுள்ளது.

English summary
kidnapping marriage with 14 year old girl valid as she’s had her first menstrual cycle, ordered pakistan court
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X