For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

14 கோடி ஆண்டுகள் பழமையான ‘பறவை இடுப்பு’ டைனோசரின் பல் கண்டுபிடிப்பு

Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: மலேசியாவில் சுமார் 14 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசர் பல் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது தாவர உண்ணி வரிசையைச் சேர்ந்த ‘பறவை இடுப்பு' டைனோசர் வகை உயிரினத்தின் பல் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மலேசிய பல்கலைக்கழகத்தின் தலைமை ஆய்வாளரான மசா டோஷி சோன் குழுவினர், பஹாங் மாகாணத்தில் நடத்திய ஆய்வில் இந்தப் பல் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்த ஆய்வில் வசேதா பல் கலைக்கழகம் மற்றும் குமா மோட்டோ பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு ஜப்பானியப் பல்கலைக்கழகங்களும் கலந்து கொண்டன.

தற்போது கண்டெடுக்கப் பட்டுள்ள டைனோசர் பல்லானது சுமார் 13 மிமீ நீளமும், 10.5 மிமீ அகலமும் கொண்டதாக உள்ளது. இது சுமார் 14 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேலும், இது தொடர்பாக மசா டோஷி சோன் கூறியதாவது:-

ஆய்வு...

ஆய்வு...

பஹாங் மாகாணத் தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர் தொடர்பான படிமங்கள் குறித்து ஆய்வைத் தொடங்கினோம்.

டைனோசர் பல் கண்டுபிடிப்பு...

டைனோசர் பல் கண்டுபிடிப்பு...

2012ம் ஆண்டு சுமார் 7 கோடி ஆண்டுகள் பழமையான முதல் டைனோசர் படிமம் கிடைத்த இடத்துக்கு அருகில் இந்தப் பல் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

பறவை இடுப்பு டைனோசர்...

பறவை இடுப்பு டைனோசர்...

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பல், ‘பறவை இடுப்பு' அமைப்பு கொண்ட டைனோசரின் பல் ஆகும். அந்த டைனோசர் தாவிர உண்ணியாகும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

குதிரை உயரம்...

குதிரை உயரம்...

மேலும், இந்த பல்லுக்குச் சொந்தமான டைனோசரானது குதிரையின் உயரத்துக்கு இருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

English summary
A dinosaur tooth found in Malaysia is at least 140 million years old and belongs to a new species within the "bird-hipped" Ornithischian order, researchers said Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X