For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெர்மனி வணிக வளாகத்தில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு: 15 பேர் உயிரிழப்பு: 10 பேர் படுகாயம்

By Karthikeyan
Google Oneindia Tamil News

முனிச்: ஜெர்மனியின் முனிச் பகுதி வணிக வளாகத்தில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 15 பேர் பலியாகியுள்ளார். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்த்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெர்மனியில் முனிச் நகரில் உள்ள ஒலிம்பியா என்ற வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்திற்குள் இன்று மாலை நுழைந்த மர்மநபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் 15 பேர் உயிரிழந்ததாக ஜெர்மன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 15 reportedly killed in Munich shopping mall shootout

போலீசாருக்கும் மர்ம நபருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நிலவுவதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.இதனால், ஜெர்மனியில் பெரும் பரபரப்பு நிலவி வருகின்றது. தாக்குதல் நடத்திய மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மர்ம நபர் தொடர்பாக எந்தவித தகவலும் இன்னும் வெளிவரவில்லை. அதேப்போன்று, இந்த தாக்குதலுக்கு எந்தவித தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றும் கூறப்படுகின்றது. பி.பி.சி.யின் செய்திப்படி துப்பாகிச்சூடு முடிவுக்கு வந்துவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

உதவி எண்கள்:

இந்நிலையில், ஜெர்மனியில் உள்ள இந்தியர்களின் நலன் கருதி அவர்களுக்கு அவசர உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 0171 2885973, 01512 3595006, 0175 4000667 ஆகிய எண்களில் அழைத்து இந்தியர்கள் அவசர உதவி பெறலாம் என்று அந்நாட்டில் உள்ள இந்திய தூரகம் அறிவித்துள்ளது.

English summary
In Germany: 15 reportedly killed in Munich shopping mall shootout
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X