For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நேபாளத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து: குஜராத்தைச் சேர்ந்த 17 யாத்ரீகர்கள் பலி

By Siva
Google Oneindia Tamil News

காத்மாண்டு: நேபாளத்தில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 17 இந்திய யாத்ரீகரக்ள் பலியாகியுள்ளனர். மேலும் 28 பயணிகள் காயம் அடைந்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 45 பேர் நேபாளத்தில் உள்ள பசுபதிநாதர் கோவிலுக்கு புனித யாத்திரை சென்றனர். புதன்கிழமை காலை 6.40 மணி அளவில் நேபாளத்தில் உள்ள ப்ரித்வி நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருக்கையில் நிலைதடுமாறி 200 மீட்டர் உருண்டு சென்று க்யாப்ரே ஆற்றில் விழுந்தது.

17 Indian pilgrims killed in Nepal accident, bodies identified

காத்மாண்டுவில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் நடந்த இந்த விபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 3 பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பலியாகினர். இந்த விபத்தில் 28 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாதர் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூருக்கு கிளம்பியபோது தான் இந்த விபத்து நடந்துள்ளது. பலியான 17 பேரில் 14 பேர் குஜராத்தில் உள்ள சுரேந்திரநகர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று நேபாள போலீசார் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளோரை நேபாளத்திற்கான இந்திய தூதர் ரஞ்சித் ரே நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். விபத்துக்குள்ளான பேருந்து குஜராத்தைச் சேர்ந்த ஸ்ரீஹரி டூர்ஸ் அன்ட் டிராவல்ஸுக்கு சொந்தமானது. விபத்தில் பலியானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பலியானவர்களின் பெயர் விவரம்,

கணேஷ் சிவா

ஜசு பென்(கணேஷ் சங்கரின் மனைவி)

கணேஷ் சங்கர்

ஈஷ்வர் ஷியாம்ஜி

காஞ்சன் பென்

லபு பென்

தல்பத் பாய்

சவிதா பென்(தேவ்ஜி பாயின் மனைவி)

தேவ்ஜி பாய்

கௌரி பென்(தயா ராமின் மனைவி)

தயா ராம்

கங்கா ராம்

லீலா பென்(நார்ஸி போப்பட் பாயின் மனைவி)

நார்ஸி போப்பட் பாய்

அல்பேஷ் கோடி பட்டேல்(உதவியாளர்)

சம்பா பென்(சமையல் கலைஞர்)

ஜசு பென்(சமையல் கலைஞர்)

English summary
At least 17 Indian pilgrims were killed and 28 others injured on Wednesday when a bus carrying them plunged into a river while negotiating a sharp bend along a downhill section of the Prithvi Highway in Nepal, police said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X