For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வால்நட்சத்திரத்தில் இறங்கப் போகும் முதல் விண்கலம் ‘ரொசேட்டா!

Google Oneindia Tamil News

பெர்லின்: வரும் 2014ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி ரொசேட்டா என்ற விண்கலம் வால் நட்சத்திரத்தில் தரை இறங்கவுள்ளது.

சர்வதேச அளவில் சூரிய மண்டலம் மற்றும் வானில் உள்ள கிரகங்கள், வால் நட்சத்திரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப் பட்டு வருகிறது. அந்தவகையில், கடந்த 2004ம் ஆண்டு மார்ச்சில் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ரொசேட்டா என்ற விண்கலத்தை சூரிய மண்டலத்தை நோக்கி அனுப்பியது.

இந்த விண்கலமானது அடுத்தாண்டு நவம்பரில் வால் நட்சத்திரமொன்றில் இறங்கும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நீண்ட பயணம்....

நீண்ட பயணம்....

இதுவரை 3 முறை பூமியின் புவி வட்ட பாதையிலும், செவ்வாய் கிரகத்தையும் சுற்றி சென்றுள்ள ரொசேட்டா விண்கலமானது, பல லட்சம் கி.மீட்டர் தூரம் பயணம் செய்து, 2 விண்கற்களை தாண்டி தனது பயணத்தை தொடர்ந்து வருகிறது.

எதிர்பார்ப்பு....

எதிர்பார்ப்பு....

சமீபத்தில் இந்த விண்கலம் 67-பி களியுமோல் ஜெராசி மென்கோ என்ற வால் நட்சத்திரத்தையும் கடந்து சென்றது. அதை பார்த்த விஞ்ஞானிகள் அந்த மிகப்பெரிய வால் நட்சத்திரத்தில் 'ரொசேட்டா' விண்கலத்தை தரை இறங்கும் என எதிர்பார்த்தனர்.

வரும் நவம்பரில்....

வரும் நவம்பரில்....

இந்நிலையில், 'ரொசேட்டா' விண்கலம் வருகிற 2014-ம் ஆண்டில் நவம்பர் 11-ந் தேதி அந்த வால் நட்சத்திரத்தில் தரை இறங்கும் என துல்லியமாக கணக்கிட்டுள்ளனர் விஞ்ஞானிகள்.

முதன்முறையாக....

முதன்முறையாக....

அது குறித்து ரொசெட்டா விண்கல திட்ட விஞ்ஞானி மட்டெல்வர் கூறுகையில், ‘இது போன்று அதற்கு முன் நடைபெற்றதில்லை. அதுபோன்று நடப்பதற்கு பல தடைகள் ஏற்படும். இதில் அதையெல்லாம் கடந்து 'ரொசேட்டா' விண்கலம் குறிப்பிட்ட நாளில் அந்த வால் நட்சத்திரத்தில் தரை இறங்கும்' எனத் தெரிவித்துள்ளார்.

English summary
If all goes according to plan, the Rosetta spacecraft will launch its Philae lander onto the surface of the comet 67P/Churyumov–Gerasimenko on Nov. 11, 2014. The comet nucleus is thought to be about four kilometres wide.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X