For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிங்கப்பூரில் ட்ரம்ப்- கிம் சந்திப்புக்காக குவிந்த 2,500 செய்தியாளர்கள்... பிரமிக்க வைத்த ஏற்பாடுகள்

ட்ரம்ப்- கிம் சந்திப்பை பதிவு செய்ய 2,500 செய்தியாளர்கள் குவிந்தனர்.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    சிங்கப்பூரில் கிம் - ட்ரம்ப் சந்திப்பை பதிவு செய்த 2500 பத்திரிக்கையாளர்கள்- வீடியோ

    செந்தோசா: சிங்கப்பூரில் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், வடகொரியா அதிபர் கிம் சந்திப்பை பதிவு செய்வதற்காக 2,500க்கும் அதிகமான செய்தியாளர்கள் குவிந்தனர். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த சந்திப்பை நேரலையாக ஒளிபரப்பு செய்வது உள்ளிட்ட அனைத்து வசதிகளும் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட்டிருந்தன.

    2,500 Journalists cover Trump-Kim Summit

    சிங்கப்பூரின் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சராக இருக்கும் தமிழரான கே. சண்முகம் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் இப்படி நேற்று பதிவிட்டிருந்தார்..

    2,500 Journalists cover Trump-Kim Summit

    "வடகொரியா- அமெரிக்கா உச்சிமாநாட்டுக்கான ஊடக மையத்தை இன்று பார்வையிட்டேன். சுமார் 2,500க்கும் அதிகமான ஊடக பிரதிநிதிகள் இந்த நிகழ்வை ஒளிபரப்பு செய்ய பதிவு செய்துள்ளனர்" என்று...

    2,500 Journalists cover Trump-Kim Summit

    இன்று 2,500க்கும் அதிகமான செய்தியாளர்களும் எந்த வித சிரமும் இல்லாமல் செய்திகளை உடனுக்குடன் உலகம் முழுவதும் அனுப்புவதற்கான பிரமாண்ட ஏற்பாடுகளை சிங்கப்பூர் அரசு செய்திருந்தது. ஒரே இடத்தில் இத்தனை ஆயிரம் செய்தியாளர்களும் குவிந்திருந்தது மிகப் பெரிய மாநாடு போல் காட்சியளித்தது.

    2,500 Journalists cover Trump-Kim Summit

    இத்தகைய ஏற்பாடுகளால் செய்தியாளர்கள் பிரமித்து போயினர். அதே நேரத்தில் குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே செய்தியாளர்கள் நேரடியாக ட்ரம்ப்-கிம் சந்திப்பை பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர். பெரும்பாலான செய்தியாளர்கள் ஊடக மையத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நேரலை காட்சிகளை வைத்து பதிவு செய்தனர்.

    English summary
    The Singapore International Media Centre was more crowded with 2,500 journalists ahead of Trump-Kim Summit.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X