For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் இருந்து பாரிஸ் சென்ற 2 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - அவசர தரையிறக்கம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் இருந்து பாரிஸ் சென்று கொண்டிருந்த இரு விமானங்களில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து அவசரமாகத் தரையிறக்கப்பட்டன.

லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து புறப்பட்ட பிரான்ஸ் ஏர்லைன்ஸிற்கு சொந்தமான ஏர்பஸ் ஏ-380 விமானம் சால்ட் லேக் சிட்டியில் தரையிறக்கப்பட்டு விமானப் பயணிகள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியே அழைத்து வரப்பட்டனர்.

2 Air France flights from U.S. to Paris diverted because of bomb threats

இதே போல் டல்லாஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் வெடிகுண்டு மிரட்டலால் ஹாலிபேக்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு பயணிகள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக ஏர்பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக் கிழமையன்று பாரிஸில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களில் 129 உயிரிழந்ததை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் பிரான்ஸ் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Two Air France flights headed from the United States to Paris were diverted because of bomb threats, officials said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X