For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டைனோசர் எலும்புகூடு வேணுமா, 2 ரெடியா இருக்கு... பாரீஸ் ஏல நிறுவனம் அறிவிப்பு

டைனோசர் எலும்புக்கூடுகள் இரண்டு ஏலத்தில் விடப்பட உள்ளது.

Google Oneindia Tamil News

பாரீஸ்: மிகப்பெரிய இரண்டு டைனோசர்களின் எலும்புக் கூடுகள் விரைவில் பாரீஸில் ஏலத்தில் விடப்பட உள்ளன.

பழங்கால வீடுகளில் இன்றும் பதப்படுத்தப்பட்ட புலி, மான் மற்றும் எருமைத் தலைகள், யானைத் தந்தங்கள் வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள் . இது அழகுக்காக மட்டுமல்லாமல், தமிழரின் வீரத்தைப் பறை சாற்றுவதாகவும் அமைந்திருக்கும். ஏனெனில் அக்காலங்களில் பலர் வேட்டைக்குச் சென்று இத்தகைய விலங்குகளை வேட்டையாடி, அவற்றின் உடலை பதப்படுத்தி வைப்பதை வாடிக்கையாளக் கொண்டிருந்தனர். மேலை நாடுகளிலும் இது போன்று இறந்த விலங்குகளின் உடலை அழகுக்காக வீட்டு வரவேற்பரையில் வைக்கும் வழக்கம் உள்ளது.

2 Dinosaur Skeletons For Auction

ஆனால், இப்படி டைனோசர்களின் எலும்புக்கூடுகளை மாட்டி வைக்க முடியவில்லையே என ஏங்கியவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக பாரீஸ் ஏல நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது, இவ்வாரத்தில் தங்களிடம் உள்ள இரண்டு பெரிய டைனோசர்களின் எலும்புக்கூட்டை ஏலம் விடப்போவதாக பாரீஸ் ஏல நிறுவனம் அறிவித்துள்ளது. பெரிய வரவேற்பறை உள்ளவர்கள் இந்த எலும்புக் கூட்டை வாங்கி அழகுக்காக வைத்துக் கொள்ளலாம் என அவர்கள் ஐடியாவும் தருகிறார்கள்.

வீடுகள் மற்றும் இன்றி பெரிய நிறுவனங்கள், ஹோட்டல்கள் போன்றவையும் தற்போது இது போன்ற ஏலத்தில் அதிக ஆர்வம் காட்டுகின்றனவாம். அதோடு, ஹாலிவுட் நடிகர், நடிகைகளும் இது போன்ற விலங்குகளின் எலும்புகளில் இருந்து உருவாக்கப்படும் ஆபரணங்களை அணிவதும் சமீபகாலமாக அதிகரித்துள்ளது.

இதனால், டைனோசர்களின் எலும்புக்கூடுகள் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்படும் என சம்பந்தப்பட்ட ஏல நிறுவனம் நம்பிக்கையாக உள்ளது.

English summary
The skeletons of an allosaurus and a diplodocus are up for auction in Paris this week, marketed as hip interior design objects -- for those with big enough living rooms.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X