For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிதி நிறுவனம் நடத்தி மோசடி... துபாயில் இந்தியர்கள் இருவருக்கு 500 ஆண்டுகள் சிறை தண்டனை!

துபாயில் இந்தியர்கள் இருவருக்கு 500 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    துபாயில் இந்தியர்கள் இருவருக்கு 500 ஆண்டுகள் சிறை தண்டனை!

    துபாய்: துபாயில் நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்த வழக்கில் இந்தியர்கள் இருவருக்கு 500 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கோவாவைச் சேர்ந்தவர்கள் சிட்னி லிமோஸ் (37) மற்றும் ரியான் டி சோஸா (25 ). இதில் தொழிலதிபரான லிமோஸ், துபாயில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவரிடம் ஊழியராக பணி புரிந்து வந்தார் ரியான். இவர்களது நிறுவனம், கடந்த 2015ம் ஆண்டு அமெரிக்க டாலர் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்ஸியில் முதலீடு செய்பவர்களுக்கு 120 சதவீத லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளது. இதனை உண்மையென நம்பிய பல முதலீட்டாளர்கள் பலர், இந்த நிதி நிறுவனத்தில் பல கோடி ரூபாய் பணத்தை முதலீடு செய்தனர்.

    2 indians gets 500 year jail in dubai for scam

    ஆரம்பத்தில் சொன்னபடியே லாபத்தை திருப்பித் தந்தனர் சிட்னியும், ரியானும். இதனால், அவர்களிடம் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. நிறைய பணம் வசூலானதும், சம்பந்தப்பட்ட நிதிநிறுவனம் முதலீட்டாளர்களுக்கு லாபத் தொகையை திருப்பித் தரவில்லை.

    சிலகாலம் பொறுத்துப் பார்த்த முதலீட்டாளர்கள், தங்களது பணத்தை திருப்பித் தருமாறு நிதி நிறுவனத்தை நச்சரிக்கத் தொடங்கினர். ஆனால், அவர்களது பணம் திரும்பக் கிடைக்கவில்லை. அப்போது தான், தாங்கள் ஏமாற்றப்பட்டது அவர்களுக்குத் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, பொருளாதார குற்றப்பிரிவில் முதலீட்டாளர்கள் புகார் அளித்தனர். அதன் தொடர்ச்சியாக லிமோஸ், ரியான் டி டிசோஸா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த 2016ம் ஆண்டு ஜூலை மாதம் சம்பந்தப்பட்ட நிதிநிறுவனம் இழுத்து மூடப்பட்டது.

    நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையில், லிமோஸ் மற்றும் ரியான், தங்களது வாடிக்கையாளர்களை ஏமாற்றியது உறுதியானது. எனவே, அவர்கள் இருவருக்கும் 500 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து துபாய் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தில் ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தங்கள் வாழ்நாள் சேமிப்பை முதலீடு செய்து ஏமாந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த வழக்கில் லிமோஸின் மனைவி மீதும் குற்றச்சாட்டு உள்ளது. அரசாங்கத்தால் சீல் வைக்கப்பட்ட அவர்களது அலுவலகத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் அத்துமீறி நுழைந்து சில ஆவணங்களை எடுத்துச் சென்றதாக அவர் மீது புகார் உள்ளது.

    இதேபோல், 'லிமோஸ் தான் ஏமாற்று நிறுவனத்தின் உரிமையாளர், ரியான் அவரிடம் ஊழியர் மட்டுமே. நிதிநிறுவனம் இழுத்து மூடப்படுவதற்கு சில மாதங்கள் முன்பாகத்தான் ரியான், லிமோஸிடம் வேலைக்குச் சேர்ந்தார். அப்படி இருக்கையில் இருவருக்கும் ஒரே மாதிரியான தண்டனையை எப்படித் தரலாம்’ என ரியானின் குடும்பத்தார் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    English summary
    Sydney Lemos, the Goan sentenced along with his senior accounts specialist, Ryan de Souza, to more than 500 years in prison by a Dubai court on Sunday for the $200 million Exential scam, had access to the who’s who of world football not so long ago.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X