ஓமனில் 2 இந்தியர்கள் பலி.. ஈரான் ட்ரோன் தாக்குதலில் 10 பேர் காயம்.. வெளியுறவு அமைச்சகம் சொன்ன தகவல்!
டெல்லி: ஓமன் நாட்டின் சோஹர் மாகாணத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இந்தியர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஈரான் நடத்திய இந்த ட்ரோன் தாக்குதலில் 10 இந்தியர்கள் காயமடைந்ததாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் - ஈரான் இடையே தொடர்ந்து மோதல் நடக்கிறது. இதனால், ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், சவுதி, ஓமன், பஹ்ரைன் என அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து, ஈரான் நேற்று தாக்குதல் நடத்தியது. ஓமனில் உள்ள சோஹர் மாகாணத்தின் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில், அங்குள்ள தொழிற்பேட்டையில் பணியாற்றிய இந்தியர்கள் இருவர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

சோஹர் மாகாணத்தில் உள்ள அல்-அவாஹி தொழிற்பேட்டை பகுதியில் வெள்ளிக்கிழமை காலை ட்ரோன்கள் விழுந்து வெடித்தன. இதில் அங்கு பணியில் இருந்த இரண்டு வெளிநாட்டவர்கள் உயிரிழந்ததாக ஓமன் அரசுச் செய்தி நிறுவனம் முதலில் தெரிவித்தது. பின்னர், உயிரிழந்த இருவரும் இந்தியர்கள் என்பதை இந்திய வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
ஈரான் - இஸ்ரேல் -அமெரிக்கா இடையே நடந்து வரும் இந்த மோதலில், ஈரானில் மட்டும் இதுவரை, 1,300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, லெபனானில் ஹெஸ்புல்லாவை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். லெபனானில் மட்டும் இதுவரை, 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள சமீபத்திய நிகழ்வுகள் குறித்து அமைச்சகங்களுக்கு இடையிலான விளக்கக் கூட்டத்தின்போது பேசிய இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் (வளைகுடா விவகாரங்கள்) அசிம் மகாஜன், "ஓமனில் நடந்த தாக்குதலில் இந்தியர்கள் இருவர் உயிரிழந்தனர். அவர்களது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
காயமடைந்த 10 இந்தியர்களில் 5 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மற்ற 5 பேர் மருத்துவமனையில் உள்ளனர். அவர்களது உயிருக்கு ஆபத்து இல்லை. எங்கள் தூதரகம் உள்ளூர் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து, தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது.
அதேபோல, ஈராக்கில் பாஸ்ரா அருகே மார்ச் 9 ஆம் தேதி தாக்குதலுக்கு உள்ளான சஃபேசியா விஷ்ணு கப்பலில் இருந்த 15 பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு தற்போது பாஸ்ராவில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த தாக்குதலில் இறந்த இந்தியரின் உடலை கொண்டு வருவதற்கும், மீட்கப்பட்ட 15 மாலுமிகளை பாதுகாப்பாக திருப்பி அழைத்து வரவும் முயற்சிகள் நடந்து வருகின்றன. எங்கள் குழு பாஸ்ராவில் இருந்து அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது" என்று தெரிவித்தார்.
-
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications