For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மெக்கா மசூதி விபத்தில் பலியான 2 இந்தியர்கள் கேரளா மாநிலத்தவர்..

By Mathi
Google Oneindia Tamil News

ரியாத்/டெல்லி: செளதியின் மெக்கா மெக்கா மசூதி பெரிய விபத்தில் சிக்கி உயிரிழந்த 2 இந்தியர்களும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

செளதியின் மெக்கா பெரிய மசூதியில் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் ஹஜ் யாத்திரைக்காக வருகை தந்திருந்தனர். அங்கு வீசிய பலத்த காற்று, மழையால் மசூதி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிரேன் இரண்டாக முறிந்து கட்டிடம் மீது விழுந்தது.

2 Keralites among 107 killed in crane mishap in Mecca

கிரேன் அப்படியே பெரிய மசூதி மீது விழுந்ததால் பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 107 பேர் பலியாகினர். இந்த 107 பேரில் 2 பேர் இந்தியர்கள் என்றும் 15 இந்தியர்கள் படுகாயமடைந்தவர்கள் என்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் பலியான 2 இந்தியர்களும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இதில் ஒருவர் பாலக்காட்டைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் என்பவரது மனைவி மூமினா என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் முகமது இஸ்மாயில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மற்றொரு கேரளா மாநிலத்தவர் குறித்த விவரம் இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

English summary
Two Keralites were among the 107 people who were killed when a crane toppled over at Mecca's Grand Mosque on Friday, officials said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X