For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈக்வடாரில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவு

By Karthikeyan
Google Oneindia Tamil News

க்விட்டோ: ஈக்வடார் நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் இருந்து 83 கிலோமீட்டர் தொலைவில் வடமேற்கே உள்ள இடத்தை மையமாகக் கொண்டு தற்போது சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியுள்ளது.

2 powerful earthquakes rock Ecuador within 24hrs

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள உயிர் சேத விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

முன்னதாக நேற்று இரவு உள்ளூர் நேரப்படி 2.37 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 6.7 ஆக பதிவாகியிருந்தது. இதனால், மக்கள் இரவு நேரத்திலும் தெருக்களில் தஞ்சம் அடைந்ததை காண முடிந்தது.

ஈக்வடாரின் க்விட்டோ நகரில் கடந்த மாதம் 16 ஆம் தேதி ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கத்தால் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் பலர் சிக்கி கொண்டனர். இடிபாடுகளில் சிக்கி 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ஈகுவடார் அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 2வது முறையாக அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ஈகுவடார் மக்களை பீதி அடையச்செய்துள்ளது.

English summary
Ecuador shaken by 7.2 magnitude quake: geophysical institute.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X