For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

500 நாள் சிறைவாசம் முடிந்தது.. 2 ராய்ட்டர்ஸ் செய்தியாளர்களும் விடுவிப்பு.. மியான்மர் அரசு அதிரடி!

மியான்மர் அரசால் கடந்த 2017ல் கைது செய்யப்பட்ட இரண்டு செய்தியாளர்கள் தற்போது விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    2 ராய்ட்டர்ஸ் செய்தியாளர்களும் விடுவிப்பு.. மியான்மர் அரசு அதிரடி-வீடியோ

    ரங்கூன்: மியான்மர் அரசால் கடந்த 2017ல் கைது செய்யப்பட்ட இரண்டு செய்தியாளர்கள் தற்போது விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள். 7 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டு இருந்த நிலையில் இவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    மியான்மரில் 2017ல் ரோஹிங்கியா முஸ்லீம்கள் மிக மோசமாக நடத்தப்பட்டார்கள். அப்போதுதான் அந்நாட்டில் இருந்து ரோஹிங்கியா முஸ்லீம்கள் இடம்பெயர்வது அதிகம் நடந்தது. வரிசையாக கொத்து கொத்தாக ரோஹிங்கியா மக்கள், அங்கிருந்து வெளியேறி இந்தியா, வங்கதேசம், ஆஸ்திரேலியாவில் குடி ஏறினார்கள்.

    2 Reuters journalists jailed in Myanmar have been released after 500 days

    இந்த நிலையில் இந்த ரோஹிங்கியா மக்களின் நிலையை குறித்து ஆங்கில ஊடகமான ராய்ட்டர்ஸ் ஊடகத்தில் பணியாற்றி வந்த வா லோன் மற்றும் கியாவ் சோ ஓ இருவரும் தொடர்ச்சியாக எழுதி வந்தனர். இவர்கள் கடந்த 2017 நவம்பர் மாதம் ரோஹிங்கிய இன அழிப்பில் நடக்கும் அரசியல் குறித்து முக்கிய கட்டுரைகளை ராய்ட்டர்ஸ் பத்திரிகையில் வெளியிட்டனர்.

    இதையடுத்து வா லோன் மற்றும் கியாவ் சோ ஓ இருவரும் 2017 டிசம்பரில் கைது செய்யப்பட்டனர். அதோடு இவர்கள் அரசின் ரகசிய ஆவணங்களை திருடிவிட்டதாகவும், அதை மக்களிடம் வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டனர். இவர்களுக்கு எதிராக நிறைய பொய்யான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டதும் பெரிய விமர்சனத்திற்கு உள்ளானது.

    பாதாள அறையும் இல்லை.. கட்டிலுக்கு அடியில் பணமும் இல்லை.. மறுக்கும் மார்ட்டின் மனைவி லீமா பாதாள அறையும் இல்லை.. கட்டிலுக்கு அடியில் பணமும் இல்லை.. மறுக்கும் மார்ட்டின் மனைவி லீமா

    இவர்களுக்கு மொத்தம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 1.5 வருடங்களாக அவர்கள் சிறையில்தான் இருந்தனர். அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகள் கோரிக்கை வைத்தும் இவர்கள் இருவரும் விடுதலை செய்யப்படவில்லை.

    இந்த நிலையில் திடீர் திருப்பமாக இன்று காலை இவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். அமைதி நடவடிக்கையாக 6520 பேரை அந்நாட்டு அரசு இன்று விடுதலை செய்தது. அதில் இவர்கள் இருவரின் பெயரும் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஆனாலும் இவர்கள் உண்மையில் விடுதலை செய்யப்பட்டதற்கு இதுதான் காரணமா, வேறு காரணம் இருக்கிறதா, என்ற கேள்வி எழுந்து உள்ளது.

    English summary
    2 Reuters journalists jailed in Myanmar have been released after 500 days in prison.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X