For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சனி கிரகத்தை சுற்றி 20 புதிய நிலவுகள்.. அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு.. புத்தம் புது திருப்பம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    சனி கிரகத்தை சுற்றி 20 புதிய நிலவுகள்..அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு-வீடியோ

    நியூயார்க்: சனி கோளைச் சுற்றி இருபது புதிய நிலவுகள் இருப்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் சூரிய குடும்பத்தில் புதிய திருப்பம் நிகழ்ந்துள்ளது.

    விண்வெளியில் பல பால்வெளிகள் இருக்கிறது. இதில் பல சூரிய குடும்பங்கள் உள்ளது. இதில் நம்முடைய சூரிய குடும்பத்திலேயே நிறைய சுவாரசியமான, நமக்கு தெரியாத விஷயங்கள் இருக்கிறது.

    நம்முடைய சூரிய குடும்பத்தில் இந்த புதிய விஷயங்களை கண்டுபிடிக்க தொடர்ந்து நிறைய ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் நடந்த ஆராய்ச்சி ஒன்றில் புதிய திருப்பம் நிகழ்ந்துள்ளது .

    ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி அசத்தும் தமிழக அரசு!ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி அசத்தும் தமிழக அரசு!

    யார் என்ன செய்கிறார்

    யார் என்ன செய்கிறார்

    கார்னகி இன்ஸ்டிடியூஷன் ஃபார் சயின்ஸின் ஆராய்ச்சியாளர் ஸ்காட் ஷெப்பர்ட் மற்றும் அவரது குழு செய்த ஆராய்ச்சியில்தான் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. அதன்படி சனி கோளைச் சுற்றி இருபது புதிய நிலவுகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

    சனி கிரகம்

    சனி கிரகம்

    சனி கிரகத்தை சுற்றி 20 புதிய நிலவுகளை கண்டுபிடித்ததன் மூலம் , 79 நிலவுகளை கொண்ட வியாழனை பின்னுக்கு தள்ளி மொத்தம் 82 நிலவுகளை கொண்டு கிரகமாக சனி உருவெடுத்துள்ளது. ஆம் சூரிய குடும்பத்தில் அதிக அளவிலான நிலவுகளை கொண்ட கிரகமாக சனி உருவெடுத்துள்ளது. இது பற்றி ஆராய்ச்சியாளர் ஸ்காட் ஷெப்பர்ட் பல சுவாரசிய தகவல்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்தார்.

    எப்படி

    எப்படி

    vஅதில், உண்மையில் சனி கிரகம் தான் நிலவுகளின் ராஜா, இது மிகவும் வியப்பூட்டும் விஷயமாக எங்களுக்கு இருந்தது. நாங்களும் எங்கள் குழுவும் சேர்ந்து சனியின் புதிய நிலவுகளைக் கண்டுபிடிக்க ஹவாயில் ஒரு தொலைநோக்கியைப் பயன்படுத்தினோம். சுமார் 100க்கும் மேற்பட்ட மிகச் சிறிய நிலவுகள் சனியைச் சுற்றி வருகின்றன.

    இன்னும் நிறைய

    இன்னும் நிறைய

    இன்னும் நிறைய கண்டுபிடிப்புகள் வரும் நாட்களில் காத்திருக்கின்றன. சனியைச் சுற்றி 5 கிலோமீட்டர் மற்றும் வியாழனைச் சுற்றி 16 கிலோமீட்டர் தொலைவில் நிலவுகள் சுற்றி வருகிறது. அதிக நிலவுகளை சனி தன் வசம் கொண்டிருப்பதைக் கண்டறிவது சற்று கடினம்தான்.

    ஆனால் எப்படி

    ஆனால் எப்படி

    ஆனாலும் வரும் காலத்தில் பெரிய தொலைநோக்கிகள் மூலம் துல்லியமாக கணக்கிடப்படும். இவை எல்லாம் மிக சிறிய நிலவுகள். சனி கிரகம் உருவான பின், பெரிய நிலவுகள், பிளவுகளின் காரணமாக இவ்வகை சிறிய நிலவுகள் உருவாகி இருக்கலாம்.

    எவ்வளவு அருகே

    எவ்வளவு அருகே

    மேலும் கண்டுபிடிக்கப்பட்ட புதிய நிலவுகளில் பதினேழு நிலவுகள் சனி கிரகத்தை எதிர் திசையில் சுற்றி வருகிறது மற்ற மூன்று நிலவுகள் சனி சுழலும் அதே திசையில் வட்டம் அடிக்கிறது. இவ்வகை சிறிய நிலவுகள் சனியிலிருந்து வெகு தொலைவில் உள்ளது, அவை ஒரு சுற்றுப்பாதையை முடிக்க இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் ஆகும்.

    என்ன திருப்பம்

    என்ன திருப்பம்

    இந்த நிலவுகள் கிரகங்களை உருவாக்க உதவிய பொருட்களின் எச்சங்கள். எனவே அவற்றைப் படிப்பதன் மூலம், கிரகங்கள் எதில் இருந்து உருவாகின்றன என்பதைப் பற்றி அறிந்துகொள்வோம். இது ஆராய்ச்சி உலகில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும், என்று குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    20 brand new moons found around the Saturn by USA scientists.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X