For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிக வெப்பமிக்க 3 ஆண்டுகளில் இடம் பிடித்தது 2017!

அதிக வெப்பமிக்க 3 ஆண்டுகளில் ஒன்றாகக் கடந்த 2017ஆம் ஆண்டு இருந்ததாக உலக வானிலை ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிக வெப்பம் பதிவான ஆண்டுகளின் பட்டியலில் இடம் பிடித்த 2017- வீடியோ

    நியூயார்க்: அதிக வெப்பமிக்க 3 ஆண்டுகளில் ஒன்றாகக் கடந்த 2017ஆம் ஆண்டு இருந்ததாக நாசாவின் கோடார்டு ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

    புவியின் வெப்பநிலை குறித்து நாசாவின் ஜிஐஎஸ்எஸ் ஆய்வு அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. அதன்படி பருவநிலை மாற்றம் காரணமாக 2017ஆம் ஆண்டு உலகில் அதிக வெப்பம் பதிவான ஆண்டுகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

    1880 ஆம் ஆண்டு முதல் உலகில் வெப்பம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதில் அதிக வெப்பம் உணரப்பட்ட ஆண்டாக 2015ஆம் ஆண்டை அறிவித்தது நாசா.

    அதிக வெப்பம் மிகுந்த ஆண்டு

    அதிக வெப்பம் மிகுந்த ஆண்டு

    இதைத்தொடர்ந்து எல்நினோ 2016ஆம் ஆண்டும் அதிக வெப்பம் மிக்க ஆண்டாக கருதப்பட்டது. இந்நிலையில் அதிகளவு வெப்பம் பதிவான ஆண்டுகளின் பட்டியலில் மூன்றாவதாக 2017ஆம் ஆண்டும் இடம் பிடித்துள்ளது.

    நாசா அறிவிப்பு

    நாசா அறிவிப்பு

    அந்த வகையில் 2017ஆம் ஆண்டில் சராசரியைவிட 1.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாகப் பதிவாகியுள்ளது என நாசாவின் ஜிஐஎஸ்எஸ் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 40 ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலை அசுர வேகத்தில் அதிகரித்து வருவதாகவும் ஜிஐஎஸ்எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

    17 ஆண்டுகள்

    17 ஆண்டுகள்

    2016ஆம் ஆண்டுதான் உலகிலேயே மிக வெப்பமான ஆண்டாக இருந்தது. இதையடுத்து அதிக வெப்பமிக்க ஆண்டுகளாக 2015, 2017ஆகிய ஆண்டுகள் உள்ளன. 19ஆம் நூற்றாண்டில் இருந்து கணக்கிடப்பட்ட அதிக வெப்பமிக்க 18ஆண்டுகளில் இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பிறகு மட்டும் அதிக வெப்பமிக்க 17ஆண்டுகள் உள்ளன.

    மாதம் வாரியாக வெப்பம்

    மாதம் வாரியாக வெப்பம்

    இதுதொடர்பான கிராஃப் ஒன்றையும் நாசாவின் ஜிஐஎஸ்எஸ் ஆய்வு அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் 2016 வரை மாதம் வாரியாக உலகின் வெப்ப நிலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உலக வானிலை மையம்

    உலக வானிலை மையம்

    இந்நிலையில் இந்தப்பட்டியலில் 2017ஆம் ஆண்டின் வெப்பநிலையும் சேர்க்கப்படும் என ஜிஐஎஸ்எஸ் அமைப்பு தெரிவித்தது. பிரிட்டிஷ் வானிலை மையம் மற்றும் உலக வானிலை ஆராய்ச்சி மையமும் அதிக வெப்பம் பதிவான 3 ஆண்டுகளில் 2017ஆம் ஆண்டும் ஒன்று என தெரிவித்தது.

    English summary
    2017 ranked as the second warmest since 1880 says Nasa's GISS. 2015 and 2016 years were in the high tempewture list.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X