For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பயங்கரம்.. 21 வயது வாலிபரை உயிருடன் தோலை உரித்துக் கொன்ற தலிபான் கொடூரர்கள்!

Google Oneindia Tamil News

காபூல்: தலிபான் தீவிரவாதிகளின் சமீபத்திய கொடுஞ்செயல் பலரையும் பதற வைத்துள்ளது. ஒரு இளைஞரை கட்டி வைத்து உயிருடன் தோலை எரித்து அந்த நபரை 10 மாடிக் கட்டடத்திலிருந்து தூக்க வீசியுள்ளன் தலிபா் கொடூரர்கள்.

ஆப்கானிஸ்தானின் பழங்குடியினர் ஆதிக்கம் அதிகம் உள்ள கோர் மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கொடூரமாகக் கொல்லப்பட்ட நபரின் பெயர் பசல் அகமது. 21 வயதேயான இளைஞர். கடந்த டிசம்பர் மாதம் இந்த இளைஞரை கொடூரமாகக் கொலை செய்துள்ளனர் தலிபான் தீவிரவாதிகள். தற்போதுதான் அந்த செய்தி வெளியே வந்துள்ளது.

21 year old man skinned alive by Talibans

தலிபான் தலைவர் ஒருவரை அகமதுவின் உறவினர் ஒருவர் கொலை செய்து விட்டதாக சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து அகமதுவின் வீட்டுக்கு வந்த தலிபான் தீவிரவாதிகள், அவரை வீட்டே விட்டு வெளியே இழுத்து வந்தனர். அவரது இரு கண்களையும் பிடுங்கி வீசினர். வலியால் துடித்த அகமதுவை விடவில்லை தலிபான் தீவிரவாதிகள்.

அவரை கட்டி வைத்து அவரது தோலை உயிருடன் உரித்துள்ளனர். மார்புப் பகுதியில் தோலை உரித்ததால் இதயம் வெளியே தெரிய ஆரம்பித்தது. வலியால் துடி துடித்த அகமது சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அவரது உடலை 10 மாடிக் கட்டடம் ஒன்றிருந்து தூக்கி வீசி விட்டனர் தலிபான் தீவிரவாதிகள்.

இதுகுறித்து அப்பகுதி எம்.பி. ருக்கியா நயீல் என்பவர் கூறுகையில் அந்த இளைஞரை உயிருடன் தோலை உரித்துக் கொன்றனர் தீவிரவாதிகள் என்றார்.

கடந்த 15 வருடங்களாக ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடன் அரசுப் படையினர் மோதி வருகின்றனர். இதுவரை முடிவு வரவில்லை. சமீப காலமாக தலிபான் தீவிரவாதிகளின் செயல்கள் குரூரமாக மாறி வருகின்றன.

பொதுமக்களையும், அப்பாவிகளையும் அவர்கள் கொடூரமாக தாக்கி கொலை செய்து வருவது அதிகரித்து வருகிறது. மக்களுக்கும், மானுடத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக தலிபான்கள் மாறி வருவதாக ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனியும் கூறியுள்ளார்.

English summary
21 year old man skinned alive by Talibans.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X