For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீனா ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து... 22 பேர் உடல்கருகி பலி

வடக்கு சீனாவில் இயங்கி வந்த தனியார் ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உடல்கருகி உயிரிழந்தனர்.

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: வடக்கு சீனாவில் இயங்கி வந்த தனியார் ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். மேலும், 22 பேர் படுகாயமடைந்தனர்.

பெய்ஜிங்கில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஷாங்ஜாகோ நகரில் இயங்கி வந்த ஹெபே ஷென்குவா கெமிக்கல் ஆலையில் இந்த விபத்து நடந்துள்ளது. நள்ளிரவில் பயங்கர வெடி சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 50 க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின.

22 killed in a blast near north China chemical plant

பணியில் இருந்த தொழிலாளர்களில் 22 பேர் தீயில் சிக்கி உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயத்துடன் துடித்த பலர், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்தில் ஆலை நாசமாகி, கரும்புகையாக வெளியேறி வருகிறது.

தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிர வைத்த டிராகன்ஃபிளை.. சீனாவிற்காக கூகுள் உருவாக்கிய புதிய சர்ச் எஞ்சின்.. ஊழியர்கள் எதிர்ப்பு! அதிர வைத்த டிராகன்ஃபிளை.. சீனாவிற்காக கூகுள் உருவாக்கிய புதிய சர்ச் எஞ்சின்.. ஊழியர்கள் எதிர்ப்பு!

நள்ளிரவில் ஏற்பட்ட இந்த பயங்கர தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்த சம்பவம் சீனாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

English summary
An explosion and fire near a chemical factory left at least 22 people dead in China.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X