For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மலேசியாவின் இளைய நாடாளுமன்ற உறுப்பினராக சாதனை படைத்தார் சட்டக் கல்லூரி மாணவர் பிரபாகரன்

மலேசியாவின் இளைய நாடாளுமன்ற உறுப்பினர் என்ற சாதனையை படைத்துள்ளார் பிரபாகரன்.

By Mathi
Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: மலேசியாவின் இளைய நாடாளுமன்ற உறுப்பினர் என்ற சாதனையை படைத்துள்ளார் சட்டக் கல்லூரி மாணவர் பிரபாகரன்.

மலேசியா நாடாளுமன்ற தேர்தலில் பத்து தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார் பிரபாகரன். இத்தொகுதியில் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட கெஅடிலான் கட்சி வேட்பாளர் தியன், பிரபாகரனுக்கு தமது ஆதரவைத் தெரிவித்திருந்தார்.

22 year old Prabakaran makes history as Malaysias Youngest MP

இத்தொகுதியில் 4 முனை போட்டியை எதிர்கொண்டு அமோக வெற்றியைப் பெற்றார் பிரபாகரன். இதற்கு முன்னர் 1976-ம் ஆண்டு 23-வது இளைஞராக போட்டியிட்டு வென்றவர் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக். கடந்த 42 ஆண்டுகாலமாக மலேசியாவின் இளைய நாடாளுமன்ற உறுப்பினர் என்ற சரித்திரத்தை நஜீப் தக்க வைத்திருந்தார்.

இதை பிரபாகரன் முறியடித்து புதிய சரித்திரத்தை எழுதியுள்ளார். பொதுத்தேர்தலில் வென்று பிரதமராகும் மகாதீரையும் பிரபாகரன் சந்தித்து வாழ்த்து பெற்றார். 92 வயதாகும் மகாதீர்தான் மலேசியா நாடாளுமன்றத்தின் மிகவும் வயதான உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Prabakaran who won from Batu parliamentary seat made Malaysian history as the youngest MP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X