For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சூடான் நாட்டு ஓடு ஆலையில் பயங்கர தீ விபத்து.. 6 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    சூடான் நாட்டு ஓடு ஆலையில் பயங்கர தீ விபத்து.. 6 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு

    கார்தும் (சூடான்) : சூடான் நாட்டில் ஓடு தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 18 இந்தியர்கள் உள்பட 23 பேர் உயிரிழந்தனர்.இதில் 6 பேர் தமிழர்கள் ஆவார். இறந்து போன இந்தியர்களின் பெயர் விவரங்களை இந்திய தூதரகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

    சூடான் நாட்டின் தலைநகர் கார்துமில் ஓடு தயாரிக்கும் மிகப்பெரிய ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உள்பட ஏராளமான இந்தியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

    23 killed in ceramics factory fire in Sudan include 6 tamilians

    இந்நிலையில் இந்த ஆலையில் இன்று காலை ஆலையில் இருந்து கேஸ் டேங்கர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் அந்த ஆலை முழுவதும் பற்றி எரிந்தது.

    ஆலையில் அப்போது 200க்கும மேற்பட்டோர் பணியாற்றிக்கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் தீ விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்தில் 18 இந்தியர்கள் உள்பட 23 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இதில் 6 பேர் தமிழ்நாட்டைச் சேந்தவர்கள் என்ற தகவலை இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் 130க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    ஜெயக்குமார்,பூபாலன், முகமது சலீம், ராமகிருஷ்ணன், வெங்கடாசலம், ராஜசேகர் ஆகிய ஆறு தமிழர்களின் பெயரையும் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. இதனிடயே இந்த விபத்தில் ஏராளமான இந்தியர்கள் படுகாயம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. பலரும் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    English summary
    include 6 tamilians, 33 people killed and more than 130 injured when a fire broke at a ceramics factory in the Sudanese capital Khartoum on Tuesday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X