For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

24 மணி நேரம் போதவில்லை என புலம்ப வேண்டாம்.. பூமியில் ஒருநாள் 25 மணி நேரமாக அதிகரிக்க போகிறதாம்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: வருங்காலங்களில், நாள் ஒன்றிற்கான நேரம், 24 மணி நேரத்தில் இருந்து 25 மணி நேரமாக அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

அமெரிக்காவின் விஸ்கான்சின் - மேடிசன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளராக இருக்கும் ஸ்டீபன் மேயர்ஸ் இதுபற்றி சில சுவாரசிய தகவல்களை தெரிவித்துள்ளார்.

140 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமிக்கு அருகில் நிலவு இருந்தது. ஆனால் வருடத்திற்கு 3.82 செ.மீ தூரத்திற்கு நிலவு விலகி சென்றபடியே உள்ளது.

விலகும் நிலவு

விலகும் நிலவு

தற்போது அது முதலில் இருந்ததைவிட 44 ஆயிரம் கி.மீ தூரம் பூமியை விட்டு விலகி சென்று உள்ளது. எனவே இப்போது ஒரு நாள் நேரம் என்பது 24 மணி நேரமாக உள்ளது. இதுவே, 140 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் ஒரு நாள் என்பது 18 மணி நேரம் 41 நிமிடங்களாக மட்டுமே இருந்தது.

25 மணி நேரங்கள்

25 மணி நேரங்கள்

நிலவு நகரும் அளவை கணக்கில் கொண்டு பார்த்தால், அடுத்த 200 மில்லியன் ஆண்டுகளில், பூமியில் ஒரு நாள் என்பது 25 மணி நேரங்களாக இருக்கும். அப்போது மக்களின் கால நேரம் அதிகரிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

24 மணி நேரம் போதலியோ

24 மணி நேரம் போதலியோ

ஒரு நாளைக்கு 24 மணி நேரமே போதவில்லை என்று புலம்பும் பலர் நம்மில் உண்டு. அவர்களின் வருங்கால சந்ததிகள் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு நாள் ஒன்றுக்கு 25 மணி நேரத்தை என்ஜாய் செய்யலாம். இதை நினைத்து அவர்கள் மனதை தேற்றிக்கொள்ளவும்.

வருங்கால சந்ததிகள்

வருங்கால சந்ததிகள்

25 மணிநேரமாக உயர்வது என்னவோ மகிழ்ச்சியான செய்திதான். ஆனால், அதுவரை உலகை நாம் பாதுகாப்பாக வைத்திருப்போமா, சுய நலத்திற்காக கூறு போட்டிருப்போமா, என்பதே நமது முன்னால் இருக்கும் கேள்வி.

English summary
The moon is moving away from our planet at just 3.82cm a year, which is having a small, but measurable effect on Earth’s movement. In around 200 million years’ time, every day on our planet will be 25 hours long, the researchers say.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X