For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காபூல் பல்கலைக்கழகத்தில் தற்கொலைப்படை தாக்குதல்.. மாணவர்கள் உள்பட 19 பேர் உயிரிழப்பு

Google Oneindia Tamil News

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் மாணவர்கள் உள்பட 19 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 22 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் காபூல் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று மாலை திடீரென புகுந்த 3 தீவிரவாதிகள் மனித வெடிகுண்டு தாக்குலை நடத்தியிருக்கிறார்கள். இதில் 19 பேர் உடல் சிதறி பலியாகினர். 22 பேர் படுகாயம் அடைந்தனர்.

25 Killed Or Wounded In Suicide Bomb Attack At Kabul University

முன்னதாக ஒருவர் மனித வெடிகுண்டை வெடித்த நிலையில் மற்ற இரணடு தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சண்டை போட்டு சுட்டு வீழ்த்தினர். இந்த சம்பவத்தால் ஆப்கானிஸ்தானில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த படுகொலை சம்பவத்தை நாங்கள் செய்யவில்லை என்று தாலிபான் அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. எந்த அமைப்பும் இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்கவில்லை.

முன்னதாக அக்., 24 ல் காபூலில் உள்ள ஒரு கல்வி மையத்தில் தற்கொலை படை நடத்திய தாக்குதலில் மாணவர்கள் உள்பட 24 பேர் பலியாகினர்.இப்போது நடத்திருப்பது இரண்டாவது சம்பவம் ஆகும்.

எல்லைக்குள் யாரும் நுழைய முயற்சிக்க மாட்டார்கள்.. ராஜ்நாத் சிங் சொன்ன மாஸ் காரணம்!எல்லைக்குள் யாரும் நுழைய முயற்சிக்க மாட்டார்கள்.. ராஜ்நாத் சிங் சொன்ன மாஸ் காரணம்!

இதனிடையே காபூல் பல்கலைக்கழகத்தில் நடந்த கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதல் என பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கல் அவர் வெளியிட்டுள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான ஆப்கானிஸ்தானின் துணிச்சலான போராட்டத்திற்கு ஆதரவளிப்போம் என்றும் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.

English summary
At least 25 people were killed or wounded Monday when gunmen stormed Kabul University in an attack that ended after hours of fighting with security forces, an official said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X