3 லட்சம் இந்தியர்களை ஜப்பானுக்கு அனுப்பும் மத்திய அரசு.. ஏன் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
  3 லட்சம் இந்தியர்களை ஜப்பானுக்கு அனுப்பும் மத்திய அரசு..ஏன் தெரியுமா?-வீடியோ

  டெல்லி: வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், படித்தவர்களின் திறனை மேம்படுத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பல திட்டங்களை உருவாக்கி வருகின்றது மோடி அரசு.

  இந்தியாவில் வேலை வாய்ப்பு குறைந்ததை அடுத்து, மக்களின் வேலை சார்ந்த அறிவை மேம்பத்த இந்த முடிவை மத்திய பாஜக அரசு எடுத்துள்ளது.

  அதன்படி வேலை சார்ந்த பயிற்சிகளை அளிப்பதற்காக மத்திய அரசு மூன்று லட்சம் இந்தியர்களை ஜப்பானுக்கு அனுப்ப முடிவு செய்து இருக்கின்றது.

   தொழில் முனைவோர்கள் நிறைந்த இந்தியா

  தொழில் முனைவோர்கள் நிறைந்த இந்தியா

  இந்தியாவில் கடந்த சில வருடங்களாக தொழில் முனைவோர்கள் எண்ணிக்கை மிக அதிக அளவில் அதிகரித்து இருக்கின்றது. படித்த முடித்தவுடன் பலர் சுயமாக தொழில் தொடங்கும் முடிவில் இறங்கி விடுகின்றனர். உலகிலேயே தொழில் முனைவோர்கள் எண்ணிக்கை இந்தியாவில் தான் அதிகமாக இருக்கின்றது.

   வேலை வாய்ப்பு குறைந்தது

  வேலை வாய்ப்பு குறைந்தது

  கடந்த சிலவருடங்களாக பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இந்தியாவில் வேலை வாய்ப்பு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே வேலையில் இருப்பவர்கள் கூட தங்களது பணிகளை இழந்து வரும் நிலையில் இருக்கின்றனர். இதனால் மத்திய அரசு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் இருக்கின்றது.

   ஜப்பான் செல்லும் 3 லட்சம் இந்தியர்கள்

  ஜப்பான் செல்லும் 3 லட்சம் இந்தியர்கள்

  இந்த நிலையில் இந்த தொழில் முனைவோர்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது. அதன்படி இந்தியர்களை ஜப்பானுக்கு அனுப்ப திட்டம் வகுத்துள்ளது. தொழில் தொடங்குவதில் ஆர்வமாக இருக்கும் 3 லட்சம் இந்தியர்கள் இந்த திட்டத்தின் கீழ் ஜப்பானுக்கு அனுப்பப்பட இருக்கின்றனர்.

   ஜப்பானில் 5 ஆண்டு பயிற்சி

  ஜப்பானில் 5 ஆண்டு பயிற்சி

  இத்திட்டத்தின் படி ஜப்பானுக்கு செல்லும் நபர்களுக்கு 5 ஆண்டுகள் வரை பயிற்சி வழங்கப்படும். இந்த ஐந்து ஆண்டு பயிற்சிக்கான மொத்த செலவுத் தொகையையும் ஜப்பான் அரசாங்கமே ஏற்றுக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை வெளியிட்ட மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதன் "இதன் மூலம் பல இளைஞர்கள் பயனடைவர். பலருக்கு ஜப்பானில் வேலை கிடைக்கும். இந்தியாவின் அந்நிய செலாவணி அதிகரிக்கும்" என்று கூறினார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Central goverment decided to send 3 lakhs Indians to japan for job training. They will get 5 years job training there.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற