For Daily Alerts
Just In
மரபணு ஆய்வு.... 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிப்பு
ஸ்டாக்ஹோம்: மரபணு ஆராய்ச்சியாளர்கள் 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிக உயர்ந்த விருதான நோபல் பரிசு பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் சுவீடனில் உள்ள ஸ்டாக்ஹோமில் உள்ள நோபல் பரிசு குழுவால் அளிக்கப்படுகிறது.
நடப்பாண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு, அமெரிக்காவின் அஜிஸ் சன்கார், தாமஸ் லிண்டால் மற்றும் இங்கிலாந்தின் பால் மோட்ரிச் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படுகிறது.

மரபணுக்கள் என்பவை நிலைத்தன்மை கொண்டதாக கருதப்பட்டு வந்து. ஆனால் மரபணுக்கள் சேதமடைகிறது என்றும் மரபணு குறைகளை சீரமைக்கும் தொழில்நுட்பத்தையும் இவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் இந்த விஞ்ஞானிகளின் மரபணு கண்டுபிடிப்பு புற்றுநோய் சிகிச்சைக்கு பெரிதும் உதவும் என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள்.