For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏமன் போர்முனையில் தொடர்புகளின்றி சிக்கி தவிக்கும் 30,000 தமிழர்கள்.. கவலையில் உறவினர்கள்

By Mathi
Google Oneindia Tamil News

சானா: ஏமனில் போர் முனைப்பகுதியில் 30 ஆயிரம் தமிழர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இவர்களைத் தொடர்பு கொள்ள முடியாமல் உறவினர்கள் தத்தளித்து வருகின்றனர்.

ஏமனில் அரசுக்கு எதிராக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு எதிராக செளதி தலைமையில் அதன் நேச நாடுகள் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றன.

30,000 Tamils Stuck in Saudi-Yemen War Zone

செளதி எல்லையோர கிராமங்களின் மீதும் கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை நடத்தி வருகின்றனர். ஓயாத குண்டு மழையும் எறிகணைகள் வீச்சும் என பதற்றத்தால் பற்றி எரிகிறது எல்லை நகரமான நஜ்ரன்.. இங்கு சுமார் 30 ஆயிரம் தமிழர்கள் வேலை செய்து வருகின்றனர்.

கடந்த ஒரு வாரமாக பணி செய்யும் இடத்திற்கு அருகிலேயே சரமாரியாக குண்டு மழை பொழிவதாகவும் வெளிநாடுகளை சேர்ந்த பலர் கொல்லப்பட்டு இருப்பதாகவும் குமரியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஒருவர் விரக்தியுடன் தெரிவித்துள்ளார்.

30,000 Tamils Stuck in Saudi-Yemen War Zone

தமிழக தொழிலாளர்கள் பலரின் செல்போன்கள் அனைத்து வைக்கப்பட்டுள்ளதால் சக தொழிலாளர்களும், உறவினர்களும் அச்சத்தில் உரைந்துள்ளனர்.

மருத்துவமனைகளுக்கு சென்று காணமால் போனவர்களை தேடி வருவதாக மற்றோரு தமிழக தொழிலாளி கூறியுள்ளார். தங்களுக்கு எந்த தகவலோ, உதவியோ கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏமனில் சிக்கி தவித்த தமிழர்கள் உள்ளிட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டடோரை இந்தியா அண்மையில் மீட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
As the war between Saudi Arabia and Yemen’s Houthi rebels intensifies, fear and anxiety seems to have gripped thousands of Tamil workers in the Saudi border town of Najran.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X